மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Earth & new planet
Earth & new planet
Published on

பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்தினால் பாலைவனத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு நடைபெறுகிறது. மழைக்காலங்களில் அதிக வெப்பம் வாட்டுகிறது. அதிக வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் நன்கு மழை பெய்கிறது. நில அதிர்வு ஏற்படாத இடங்களில் நிலஅதிர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால், பூமியில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என எந்த உயிரினங்களும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பூமி விரைவில் அழிந்துவிடும் என பல சுற்றுப்புற தன்னார்வலர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர்.

250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு, பூமியில் வெள்ளம், வெப்பம் அதிகரித்து, அதன் காரணமாக அனைத்து உயிரினங்களும் இறக்கும் நிலை ஏற்பட்டு, பூமி முற்றிலும் அழிந்துபோகும் என்று  ரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வின் படி, டெல்லி மெயில்  ரிப்போர்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வானியல் அறிஞர்கள், ஏராளமான கிரகங்கள் நிறைந்த, கற்பனைக்கு எட்டாத வகையில் பறந்து விரிந்த, இந்தப் பிரபஞ்சத்தில் பூமியைப் போன்று மனிதர்களும், பிற ஜீவராசிகளும் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்கள் ஏதேனும் உள்ளதா? என தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற, பூமியைப் போன்ற, புதிய கிரகத்தினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் அமைந்துள்ள காலிபோர்னியா பல்கலைக்கழத்தின் ஆராச்சியாளர்கள் இந்த கிரகத்தைக்  கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் ஹவாயிலுள்ள கெக் தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கிரகம் பற்றிய தகவல்கள் 'நேச்சர் அஸ்ட்ரானமி' (Nature Astronomy) என்ற இதழில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
BSNL-ன் புதிய சோதனை வெற்றி - 'Direct To Device' - இனி சிம் கார்டு இல்லாமல் போன் பேசலாம்!
Earth & new planet

இது, பூமியில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாகவும், பூமியின் எடையை ஒத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. பூமியைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளை இந்த கிரகம் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தைப் போல இரண்டு மடங்கு தொலைவில் இந்த புதிய கிரகம் அமைந்துள்ளது. இதற்கு  கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படை தேவையான காற்று, தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பூமியைப் போன்ற இந்த புதிய கிரகத்தினால், மனிதர்களால் இன்னும் பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியும் என்றும், அதே சமயம், இந்த புதிய கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் நிலையும் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் இந்த கிரகம் தொடர்பாக புதிய, புதிய தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com