நீங்கள் விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும்போது விமானத்தின் மீது மின்னல் தாக்கினால் விமானத்திற்கு என்னவாகும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதைக் கேட்கும்போது பயமாக இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டுப்பிடித்து விட்டார்கள். அதைப் பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தின் மீது மின்னல் தாக்கும்போது, அந்த விமானம் வெடித்துவிடுமா? அல்லது அதில் இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? போன்ற கேள்விகள் வந்தாலும் அதற்கான ஒரே பதில் இதில் எதுவுமே நடக்காது என்பதுதான்.
விமானம் வானத்தில் வேகமாக பறந்துக்கொண்டிருக்கும் போது, எதிரில் வரும் காற்றும், அந்த விமானமும் மோதி ஒருவகையான Static electricity உருவாகும். அதாவது ஒரு நிலையான மின்சாரம் உருவாகும். இந்த Electricity விமானத்தின் எல்லா பாகத்திற்கும் செல்வது போல இணைத்து வைத்திருப்பார்கள். இதனால் விமானத்தின் எல்லா பாகத்திலேயும் சமமாக Electricity இருக்கும்.
விமானத்தில் ஆங்காங்கே கூர்மையான கம்பிகள் வைத்திருப்பார்கள். அந்த கம்பி வழியாக இந்த நிலையான மின்சாரம் வெளியேறிவிடும். இடி, மின்னல் என்பது ஒருவகையான அதிக சக்திக்கொண்ட மின்சாரம். இதனால் இடி, மின்னல் விமானம் மீது விழும் பொழுது அந்த கூர்மையான பொருள் வழியாக மின்சாரம் கடத்தப்படும். இதனால் எந்த பாதிப்பும் விமானத்திற்கோ அல்லது விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கோ நடப்பதில்லை.
இதுவரை மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதா? என்று கேட்டால், 1967ல் விமானத்தில் மின்னல் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த நிகழ்வுக்கு பிறகு மின்னல் தாக்கினாலும் விமானத்திற்கு சேதம் ஏற்படாத வண்ணம் விமான தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
Air Canada Boeing 777-300ER விமானம் விமானப் பாதையிலிருந்து பறக்கத்தொடங்கும்போது விமானத்தின் மீது மின்னல் தாக்கியது. எனினும், விமானம் எந்த பாதிப்புமின்றி பயணத்தை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தத்கது. தற்போது தயாரிக்கப்படும் விமானங்கள் மிகவும் பாதுகாப்புமிக்கதாக தயாரிக்கப்படுவதால், இடி மின்னல் போன்றவை தாக்கும் பிரச்னையை எளிதாக சமாளித்துவிடலாம். அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது இதுபோன்று நிகழ்ந்தால், நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.