உயரமான டவர்களில் ஏன் சிகப்பு நிற விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Do you know why tall towers have red lights?
Do you know why tall towers have red lights?Image Credits: Wetra Lights
Published on

யரமான கட்டடம், டவர் போன்ற இடங்களில் சிகப்பு நிற விளக்கு எரிந்துக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். இதற்கு பின் இருக்கும் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.

உயரமான கட்டடங்கள், செல்போன் டவர், பெரிய காற்றாலைகள் போன்றவற்றில்  சிகப்பு நிற விளக்கு பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் சற்று கவனித்து பார்த்தால் தெரியும். இந்த விளக்கை உயரமான இடங்களில் மட்டுமே வைத்திருப்பார்கள்.

அதற்கு முக்கியமான காரணம், விமானங்கள், ஹெலிகாப்டர் பறந்து செல்லும்போது இதுபோன்ற உயர்ந்த கட்டிடங்களில் பனிக்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் இடித்து விபத்துக்குள்ளாவது பெரும் பிரச்னையாக இருந்தது.

விமானத்தில் பறந்துக் கொண்டிருப்பவர்களுக்கு மூடுபனி காலத்திலோ அல்லது கடுமையான மழைக்காலத்திலோ அவர்கள் முன்பு என்ன இருக்கிறது என்பது தெரியாது. அதனால் அவர்களுக்கு தெரியும் வகையில் இங்கே உயரமான கட்டிடமோ அல்லது டவரோ இருக்கிறது என்பதை விமானிகளுக்கு தெரிவிப்பதற்காகவும், அதில் இடித்து எந்த ஒரு விபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் இந்த சிவப்பு நிற விளக்கை வைத்திருக்கிறார்கள்.

200 அடிக்கு மேல் உயரம் கொண்ட கட்டடத்திலும், டவரிலும் நிச்சயம் சிகப்பு நிற விளக்கை பொருத்த வேண்டியது அவசியமாகும். இப்போது ஏன் சிகப்பு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி வரும் அல்லவா? ஏனெனில், சிகப்பு நிறத்தை தூரத்திலிருந்தும் பார்ப்பதற்கு தெளிவாக தெரியும். இதை Aircraft warning light என்றும் கூறுவார்கள். இந்த சின்ன ஐடியாவால்தான் பல விமான விபத்துகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
‘Phubbing’ நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
Do you know why tall towers have red lights?

இந்த விளக்கை கண்டிப்பாக 200 அடிக்கு மேல் உள்ள கட்டடத்தில்தான் பொருத்த வேண்டும். உயரம் குறைவாக இருக்கும் கட்டிடங்களில் பொருத்தக்கூடாது. ஏனெனில், இதை வைத்துதான் விமானிகள் கண்டிப்பாக அந்த கட்டிடம் 200 அடி உயரம் கொண்டது என்று அதனுடைய அளவை கணித்துக்கொள்வார்கள். தற்போது LED விளக்குகளை இதற்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஏனெனில், LED விளக்குகள் அதிக ஆயுட்காலம் கொண்டதாகவும், குறைந்த மின்சக்தியை உறிஞ்சக்கூடியதாக இருப்பதனாலுமேயாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com