உங்க செல்போனுக்கு எப்போ சார்ஜ் போடணும் தெரியுமா?.. இது உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! 

Do you know when to charge your cell phone?
Do you know when to charge your cell phone?
Published on

செல்போனின் தேவையும் பயன்பாடும் இந்த காலத்தில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக செல்போனை பயன்படுத்தும் மக்கள் அதன் பேட்டரி விரைவாக குறையக்கூடாது என விரும்புகிறார்கள். இதனால் செல்போனின் பேட்டரி கொஞ்சம் குறைந்தாலும் உடனடியாக சார்ஜில் போடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் அப்படி அடிக்கடி செல்போனை சார்ஜில் போடுவது சரியா? செல்போனை எப்போது சார்ஜ் போட வேண்டும்? என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த பதிவில் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

உங்கள் செல்போன் பேட்டரி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க 20%க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 20%-ல் சார்ஜை இணைத்து, 90% வரை சார்ஜ் செய்வது பேட்டரியை நீண்ட காலம் பழுதாகாமல் பராமரிக்க உதவும். குறிப்பாக, நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், பேட்டரி 0%-ல் இருந்து சார்ஜ் செய்யும்போது உங்கள் செல்போன் சூடாகும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் செல்போனை ஆஃப் ஆகும் வரை பயன்படுத்தாதீர்கள். 

உங்கள் செல்போனை நீங்கள் அதிக நேரம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், 50 முதல் 60 சதவீத சார்ஜில் வைத்திருக்கும் படி ஆப்பிள் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஏனெனில் இச்சமயத்தில் பேட்டரிக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தால், பேட்டரி வெப்பமாகி பழுதாவது தவிர்க்கப்படுகிறது. 

உங்கள் செல்போன் பேட்டரி சேதமாவதைத் தவிர்க்க உங்கள் போனை எப்போதும் குளிர்ந்த இடத்தில் வையுங்கள். அதற்காக ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிட வேண்டாம். அறை வெப்பநிலையிலேயே வெயில் அதிகம் படாத இடத்தில் செல்போனை வைப்பது அந்த போனுக்கும், பயனருக்கும் பாதுகாப்பானது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைகள் அதிகமாக மொபைல் பார்க்கிறார்களா? உஷார் பெற்றோர்களே!
Do you know when to charge your cell phone?

செல்போனுக்கு எப்போதுமே நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மீறி, மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, ஏதோ ஒரு நிறுவனத்தின் சார்ஜரை பயன்படுத்தும்போது அது உங்கள் செல்போனுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.

இந்த விஷயங்களை முறையாக நீங்கள் கடைப்பிடித்தாலே, உங்களது செல்போனை நீண்ட நாட்கள் பழுதாகாமல் பயன்படுத்த முடியும். முடிந்தவரை செல்போனின் பேட்டரியை நன்றாகப் பராமரித்தாலே, செல்போனின் ஆயுள் நீடித்து உழைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com