
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மொபைல் போன் இல்லாமல் ஒரு நாளை கடத்துவது எளிதான காரியமல்ல. செல்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவரவர் கைகளில் தேவையான பொருட்களுடன் சேர்த்து ஒரு தொலைபேசி சார்ஜரை கண்டிப்பாக வைத்திருக்கிறோம்.
மடிக்கணினிகள், மைக்ரோவேவ் ஓவன்கள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் 3 பின்கள் உள்ள நிலையில் எல்லா வகை மொபைல் சார்ஜரிலும் 2 பின்கள் மட்டுமே இருப்பதை பார்த்திருப்போம். அதற்கான காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்சார விநியோகத்துடன் மின்னணு சாதனங்கள் மற்றும் சார்ஜர்களின் பின்கள் தொடர்புடையவை. மின்விசிறிகள், டிவிகள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தப்படும் பெரிய மின்னணு சாதனங்களின் பின்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மின் தேவை, பாதுகாப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்காக மொபைல் சார்ஜரில் 2 பின்கள் உள்ளன.
மின்சாரத்தை ஏசி (Alternating Current) இலிருந்து மொபைல் சார்ஜர் பெறுகிறது. Phase (நேரடி), நடுநிலை (neutral) மற்றும் பூமி (தரை) என ஏசி சப்ளையில் மூன்று கம்பிகள் உள்ள நிலையில், மொபைல் சார்ஜரை இயக்க phase மற்றும் நியூட்ரல் மட்டுமே தேவை. அதனால் தான் மொபைல் சார்ஜரில் 2 பின்கள் மட்டுமே உள்ளது.
மிகக் குறைந்த மின்சாரத்தை மட்டுமே அதாவது 5 வாட்ஸ், 65 வாட்ஸ் அல்லது 120 வாட்ஸ் வரை) மட்டுமே மொபைல் சார்ஜர்கள் பயன்படுத்துகின்றன. மூன்றாவது பின்னான எர்த்திங் இவ்வளவு குறைந்த சக்திக்கு தேவையில்லை. பெரும்பாலும் கனமான சாதனங்களில் மட்டுமே அதாவது பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றிற்கு மட்டுமே எர்த்திங் பயன்படுத்தப்படுகிறது.
அதிக மின்னோட்டத்தை லேப்டாப் சார்ஜர்களும் பயன்படுத்துவதால், மின்னோட்டக் கசிவு ஏற்பட்டால் மின்சார அதிர்ச்சியை தடுக்க அவற்றிற்கு ஒரு எர்த் பின் வழங்கப்படுகிறது. மேலும் சார்ஜரில் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு சுற்றும் உள்ளது.
அதிக மின்னழுத்தம் மின்னோட்டம் மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஆகியவற்றிலிருந்து இது பாதுகாக்கிறது. ஆனால், எர்திங் பின் இல்லாமல் சார்ஜர் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இரண்டு பின்களுடன் உள்ளன.
மொபைல் சார்ஜர்கள் குறைவான மின்சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் என்பதை தெரிந்து கொண்ட நாம் அதிக நேரம் மொபைல் போனை சார்ஜர் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக நேரம் சார்ஜ் செய்வதால் மொபைல் போன் சூடாகி வீணாக வாய்ப்புள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.