உங்க கம்ப்யூட்டர் அடிக்கடி கிராஷ் ஆகுதா?.. இப்படி செஞ்சா தடுக்கலாம்! 

Does your computer crash often?
Does your computer crash often?
Published on

சில நேரங்களில், ஏதேனும் அவசர வேலையை நாம் கணினியில் செய்து கொண்டிருக்கும் போது, அது திடீரென கிராஷ் ஆகி அப்படியே நின்றுவிட்டால், அந்த உணர்வை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஆனால் இனி அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி கிராஷ் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த நவீன டிஜிட்டல் உலகில் கணினி மற்றும் செல்போன் இல்லாத நபர்களே இருக்க முடியாது. செல்போனில் நாம் நினைக்கும் அளவுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் வராது. இதுவே கணினியில் சாப்ட்வேர் ஹார்டுவேர் என நிறைய பாகங்கள் இருப்பதால், அவ்வப்போது ஏதேனும் தொந்தரவை நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி அனைவரும் சந்திக்கும் ஒரு பாதிப்புதான் கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது.‌ அதாவது நாம் ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென கம்ப்யூட்டர் அப்படியே நின்றுவிடும். 

இந்த பிரச்சினையை சரி செய்ய முதலில் இது எதனால் வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதல் காரணமாக இருப்பது கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பிரச்சினை. கம்ப்யூட்டர் பாகங்கள் ஏதேனும் சரியாக வேலை செய்யாதபோது இந்த பிரச்சனை வரும். இதைக் கண்டுபிடிக்க முதலில் உங்களது டிவைஸ் மேனேஜருக்கு சென்று பார்த்தால் உங்கள் கணினியின் உள்ள பாதிப்புகளை காட்டிக் கொடுத்துவிடும். 

டிவைஸ் மேனேஜரில் கம்ப்யூட்டர் என்பதை கிளிக் செய்து பார்த்தால், கணினியில் என்னென்ன விஷயங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும். அதில் ஏதேனும் தவறு இருந்தால், உங்களுக்கு மஞ்சள் நிறத்தில் சுட்டிக் காட்டிவிடும். அப்போது அதை நீங்கள் கிளிக் செய்து ஏற்பட்டுள்ள தவறை சரி செய்ய முயற்சிக்கலாம். 

உங்கள் கணினியில் வைரஸ் இருந்தாலும் அடிக்கடி கிராஷ் ஆகும். இதற்கு முறையான ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தி அவ்வப்போது அப்டேட் செய்து வந்தாலே இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
Ambient Mode: யூடியூபில் இருக்கும் இந்த சீக்ரெட் அம்சம் பற்றி தெரியுமா?
Does your computer crash often?

சில நேரங்களில் கம்ப்யூட்டரில் ரேமை அதிகரிக்க மற்றொரு புதிய ரேமை இணைக்கும் போது, இந்தப் பிரச்சனை ஏற்படலாம். அதாவது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ரேமை விட, புதிய சிப்செட் கொண்ட ரேமை பயன்படுத்தும் போது அவற்றில் இருக்கும் வேறுபாடு காரணமாக எரர் காண்பிக்கப்படும் வாய்ப்புள்ளது. இவ்வாறு காட்டும் போது முந்தைய ரேமின் வெயிட் ஸ்டேட்டசை உயர்த்தி சரி செய்யலாம்.

உங்கள் கணினி அடிக்கடி கிராஷ் ஆக மிக முக்கிய காரணம் எதுவென்றால் அது ஹார்ட் டிஸ்க் தான். ஹார்ட் டிஸ்கை எப்போதுமே கிளியராக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பைல்களை அதிகமாக வைத்திருக்கும்போது கம்ப்யூட்டரின் இயக்கம் குறைந்து, அப்படியே நின்றுவிடும். எனவே முடிந்தவரை OS இருக்கும் C டிரைவை காலியாக வைத்திருங்கள். அதிகப்படியான பைல்களை C டிரைவில் சேமிக்க வேண்டாம். 

இவற்றை நீங்கள் முறையாக கடைப்பிடித்தாலே உங்கள் கணினி எவ்வித தொந்தரவும் இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com