eBarracuda: இந்தியாவின் அதிவேக சோலார் எலக்ட்ரிக் படகு! 

eBarracuda.
eBarracuda.

eBarracuda என்ற இந்தியாவின் அதிவேக சோலார் எலக்ட்ரிக் படகு கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் பசுமை போக்குவரத்துக்கு ஏற்ப, ஸ்டேட் ஆப் தி ஆர்ட் படக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள eBarracuda, ஆலப்புழா நவகாதி பகுதியில் முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படகு வெளியீட்டு நிகழ்ச்சியில் பல முக்கிய நிறுவனங்களின் சிஇஓ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த படகுக்கு ஏன் eBarracuda என பெயர் வைக்கப்பட்டது என்றால், Barracuda என்பது கடலில் வாழக்கூடிய பெரிய வாய் கொண்ட மீனாகும். இந்த படகுக்கும் அந்த மீனைப் போலவே பெரிய வாய் கொண்ட அமைப்பு இருப்பதால், eBarracuda என பெயர் வைக்கப்பட்டது.

இந்த படகு இயங்குவதற்கு தேவையான முழு மின்சார ஆற்றலும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வகையில் படகின் மேற்பரப்பில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. படகின் முன் பகுதி அகலமாக இருப்பதால், கரையில் இருந்து வேகமாக பொருட்களை ஏற்றி இறக்க முடியும். அதே நேரம் கரைக்கு நெருக்கமாகவும் இந்த படகை கொண்டு செல்ல முடியும். 

நாவால்ட் என்ற நிறுவனம் இந்த படகின் தோற்றத்தை வடிவமைத்து, மசகோன் டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த படகால் அதிகபட்சம் மணிக்கு 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்ல முடியும். ஒருமுறை இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் தொடர்ச்சியாக 7 மணி நேரம் இயக்க முடியும். மொத்தம் 14 மீட்டர் நீளம் கொண்ட இந்த சோலார் எலக்ட்ரிக் படகு, 4.4 மீட்டர் அகலம் கொண்டது. அதிக ஆற்றல் கொண்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆறு கிலோ வாட்ஸ் சூரிய ஆற்றலை அதில் சேமிக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
ஏற்காட்டில் புதிய படகு.. குஷியில் சுற்றுலா பயணிகள்!
eBarracuda.

ஒரே நேரத்தில் இந்த படத்தில் 12 பேர் வரை சொகுசாக பயணிக்கலாம். பொதுவாகவே படகுகள் இரைச்சலை ஏற்படுத்தும். ஆனால் மோட்டார் மூலம் இயங்கும் இந்த படகு எந்த ஒரு இரைச்சலையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தாது. நான்கு மீட்டர் உயரத்திற்கு அலைகள் வந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கும் வகையில் eBarracuda வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com