Exoplanets: மற்றொரு பூமிக்கான தேடல்!

Exoplanets
Exoplanets: The Search for Another Earth!
Published on

மனிதகுலம் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. நாம் வாழும் பூமி சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே கிரகம் அல்ல என்பதை அறிந்த பிறகு, பூமியைப் போலவே இருக்கக்கூடிய வேறு கிரகங்களைத் தேடும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக கடந்த சில தசாப்தங்களாக விஞ்ஞானிகள் Exoplanets எனப்படும் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.  

எக்ஸோ பிளானெட்ஸ் என்பது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள். இந்த கிரகங்களை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் பலநூறு எக்ஸோ பிளானெட்டுகளை கண்டுபிடித்துள்ளோம். இந்த கண்டுபிடிப்புகள் நமது சூரிய மண்டலம் மற்றும் பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலை முற்றிலுமாக மாற்றியுள்ளன. 

முதல் எக்சோ பிளானெட் 1992 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மற்ற கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இத்தகைய புதிய கிரகங்களை நாம் நேரடியாக பார்க்க முடியாது. ஏனெனில், அவை மிக தூரத்தில் இருப்பதால் நட்சத்திரங்களின் ஒளியில் மறைந்து விடுகின்றன. எனவே, விஞ்ஞானிகள் மறைமுகமாக மற்ற கிரகங்களைக் கண்டுபிடிக்க பல்வேறு முறைகளை பின்பற்றுகின்றனர். 

  • Transit Method: ஒரு எக்ஸோ பிளானெட் அதன் நட்சத்திரத்தின் முன் செல்லும்போது நட்சத்திரத்தின் ஒளி சிறிது நேரம் மங்கும். இந்த ஒளியின் மாற்றத்தை அளவிட்டு எக்ஸோ பிளானெட்களை கண்டுபிடிக்கலாம். 

  • Radial Velocity Method: ஒரு எக்சோ பிளானெட் அதன் நட்சத்திரத்தை சுற்றி வரும்போது நட்சத்திரம் சிறிது தூரம் நம்மை நோக்கியும், சிறிது தூரம் நம்மை விட்டு விலகியும் நகரும். இந்த நகர்வின் காரணமாக நட்சத்திரத்தின் ஒளியில் ஏற்படும் மாற்றத்தை அளவிட்டு புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்க முடியும். 

  • Gravitational Microlensing: ஒரு எக்ஸோ பிளானெட் மற்றும் ஒரு நட்சத்திரம் பூமியின் பார்வைக் கோட்டில் ஒன்றின் பின் ஒன்றாக வரும்போது, எக்ஸோ பிளானெட்டின் ஈர்ப்பு விசையால் நட்சத்திரத்தின் ஒளி வளைந்துவிடும். இந்த ஒளியின் வளைவை அளவிட்டு எக்ஸோ பிளானெட்களைக் கண்டுபிடிக்கலாம். 

  • Direct Imaging: மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி நட்சத்திரத்தின் ஒளியை தடுத்து நேரடியாக எச்ஸோ பிளானெட்களைப் பார்க்க முயற்சிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
மனித ரோபோக்களை அடுத்த ஆண்டு களமிறக்கும் எலான் மஸ்க்!
Exoplanets

இவ்வாறு எக்ஸோ பிளானெட்களை ஆராய்வது மனிதகுலத்தின் மிக முக்கியமான அறிவியல் முயற்சிகளில் ஒன்றாகும். இது நமது பிரபஞ்சம் பற்றிய புரிதலை அதிகரித்து நாம் எங்கிருந்து வந்தோம்,எங்கே செல்கிறோம் என்ற கேள்விக்கு விடையாக அமையும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com