புது ஏர் கூலர் வாங்கப் போறீங்களா? இதெல்லாம் பார்த்து வாங்குங்க ப்ளீஸ்!

Air Cooler
Air Cooler

கடந்த எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் பலரும் தங்கள் வீடுகளை குளுமையாக வைத்துக்கொள்ள ஏசி, ஏர் கூலர் என குளிரூட்டும் சாதனங்களை வாங்குகின்றனர். இதில் ஏர் கூலர்கள், ஏர் கண்டிஷனர்களுக்கு எல்லா விதத்திலும் அதிக திறன் கொண்ட மாற்றாகும். ஏனெனில் இது குறைந்த விலையிலேயே நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. இப்போது சந்தையில் பல்வேறு விதமான ஏர் கூலர்கள் கிடைக்கும் நிலையில், அதில் சரியானதைத் தேர்வு செய்து வாங்குவது மிகவும் முக்கியமாகும். இப்பதிவில் ஏர் கூலர் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  1. நீங்கள் புதிதாக ஏர் கூலர் வாங்கப் போகிறீர்கள் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது அதன் குளிரூட்டும் திறன் தான். இது நிமிடத்திற்கு எத்தனை கன அடி காற்றை வெளியேற்றும் என்கிற விகிதத்தில் அளவிடப்படுகிறது. நீங்கள் இதை எங்கு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, எத்தகைய ஆற்றல் மிக்க ஏர் கூலர் வாங்க வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். 

  2. அடுத்ததாக ஏர் கூலரின் வாட்டர் டேங்க் அளவு எவ்வளவு எனப் பாருங்கள். ஏனெனில் இதன் அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே அவ்வப்போது தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது. தொடர்ச்சியாக ஏர் கூலரைப் பயன்படுத்தும்போது தண்ணீர் விரைவாக தீர்ந்துவிடலாம். எனவே வாங்கும் போதே அதிக கொள்ளளவு கொண்ட ஏர் கூலரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 

  3. ஏர் கூலரின் குளிரூட்டும் செயல்பாட்டிற்கு கூலிங் பேடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை தண்ணீரை உறிஞ்சி ஆவியாகும் செயல்பாட்டில் உதவுவதால், சுற்றுப்புறத்தை குளிர்விக்கும் தன்மை இதைப் பொருத்தே அமைகிறது. மரக் கம்பளி அல்லது செல்லுலோஸ் பேடுகள் போன்ற உயர்தர குளிரூட்டும் பட்டைகள் கொண்ட ஏர் கூலரைத் தேர்வு செய்வது நல்லது. 

  4. எளிதாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏர் ஃப்லோ கண்ட்ரோல் மற்றும் ஸ்விங் செயல்பாடு கொண்ட ஏர்கூலர்கள், குளிரூட்டப்பட்ட காற்றை குறிப்பிட்ட திசையில் செலுத்த உதவுகின்றன. எனவே பல்வேறு வேக அமைப்பு மற்றும் காற்றின் திசையை மாற்றும் அம்சங்கள் கொண்ட ஏர் கூலரை பார்த்து வாங்குங்கள். 

  5. ஏர் கூலரைப் பயன்படுத்தும் போது மின்சாரக் கட்டணம் அதிகம் வராமல் இருக்க, நல்ல ஆற்றல் திறன்மிக்க ஏர்கூலரைத் தேர்வு செய்யுங்கள். 

  6. அடுத்ததாக, ஏர் கூலர் ஏற்படுத்தும் இரைச்சல் அளவு என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக இதை நீங்கள் உங்கள் வீட்டின் படுக்கை அறையில் பயன்படுத்தத் திட்டமிட்டால், அதிக இரைச்சல் வராத ஏர் கூலரைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். 

  7. மேலும் உங்களது வசதிக்கு ஏற்ப கூடுதல் அம்சங்கள் இருக்கும் ஏர் கூலராக வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது வரும் ஏர் கூலர்களுக்கு ரிமோட் கண்ட்ரோல், எவ்வளவு நேரம் ஓட வேண்டும் என்பதற்கான டைமர்கள், காற்றின் தரத்தை மேம்படுத்தும் ஃபில்டர்கள் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. எனவே உங்களுக்குத் தேவையான அம்சங்கள் இருக்கும் ஏர் கூலரைத் தேர்வு செய்யுங்கள். 

  8. இறுதியாக, நல்ல பிராண்ட் ஏர் கூலரை வாங்குவது உங்களுக்கு நீண்ட கால பலனளிக்கும். விலை குறைவாக இருக்கிறது என மோசமான தரம் கொண்ட பிராண்டைத் தேர்வு செய்தால், அது விரைவில் உங்களுக்கு செலவு வைத்து விடும். அதே நேரம் வாங்கும் ஏர் கூலருக்கு நல்ல உத்தரவாதம் கொடுக்கும் பிராண்டைத் தேர்வு செய்யுங்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சரி செய்யும் அளவுக்கு கஸ்டமர் சப்போர்ட் இருக்கும் ஏர் கூலர் பிராண்டை தேர்வு செய்வது நல்லது. 

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள்!
Air Cooler

இப்படி, ஏர் கூலர் வாங்கும்போது பல விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வாங்கும் போதே நல்ல ஏர் கூலராக வாங்கிவிட்டால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com