கொடிய தேள் விஷத்தில் ஒளிந்திருக்கும் மாபெரும் மருத்துவ ரகசியம்.. இனி இதுதான் ஒரே வழி!

fat-tailed-scorpion
fat-tailed-scorpion
Published on

நமது உலகில் பல கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றின் விஷம் மனிதர்களின் உயிரை நொடிப்பொழுதில் பறித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதே விஷத்தை கொண்டு மனிதர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்றால் அது உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

உலகிலேயே மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் ஒரு தேளின் விஷத்தில் இருந்து ரத்த கசிவை தடுக்கும் ஒரு அருமையான மருத்துவ ரகசியத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

தேளின் கொடிய விஷம்!

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் கொழுத்த வால் கொண்ட ஒரு வகையான தேள்கள் (Fat-Tailed Scorpion) அதிக அளவில் காணப்படுகின்றன. இவை மனிதர்களை கொட்டினால் நரம்பு மண்டலம் முற்றிலுமாக செயலிழந்து இதயம் துடிப்பதை நிறுத்திவிடும். இது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த தேள் கொட்டிய சிலருக்கு ரத்தம் உறைந்து போவதாக சில புகார்கள் வந்தன. 

இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன என்பதை அறிய, மனிதர்களின் ரத்த பிளாஸ்மாவில் இந்த விஷத்தை செலுத்தி சோதித்த போது, அது ரத்தத்தை மிக வேகமாக உறைய வைப்பது உறுதியானது.

வேலை செய்யாத பழைய மருந்துகள்!

பொதுவாக தேள் கொட்டினால் மருத்துவமனையில் கொடுக்கப்படும் வழக்கமான முறிவு மருந்துகள் நரம்பு மண்டலத்தை மட்டுமே காப்பாற்றுகின்றன. ஆனால் ரத்தம் உறைவதை அந்த மருந்துகளால் கொஞ்சம் கூட தடுக்க முடியவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு அதிர்ந்தனர். மனித உடலில் உள்ள ரத்தத்தை உறைய வைக்கும் புரதங்களை இந்த விஷம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. 

ஒரு உயிரைப் பறிக்கும் விஷம் எப்படி உயிரை காக்கும் என நீங்கள் கட்டாயம் யோசிக்கலாம். இந்த கொடிய விஷத்தில் உள்ள ரத்தத்தை உறைய வைக்கும் அந்த குறிப்பிட்ட ரசாயன மூலக்கூறுகளை மட்டும் பிரித்தெடுத்து அதனை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரிய கோவிலும் கருவூர் சித்தரின் அருளும்!
fat-tailed-scorpion

பெரிய விபத்துகளில் சிக்கியவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கோ அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது வழக்கம். அந்த மாதிரி நேரங்களில் இந்த தேள் விஷத்தில் இருந்து தயாரிக்கப்படும் புதிய மருந்துகளை கொண்டு அந்த ரத்த கசிவை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

பாம்புகளின் விஷம் எப்படி பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறதோ அதே போல இந்த தேளின் விஷமும் ஒரு மாபெரும் மருத்துவ புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. உலகை அழிக்கும் என்று நாம் நினைத்த பல விஷயங்களுக்குள்ளேயே உலகை காக்கும் பல நல்ல விஷயங்களும் மறைந்து கிடக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
காசநோய் கண்டறிய இனி 'சளி' தேவையில்லை: ஒரு நாக்கு பஞ்சுருட்டு போதும்!
fat-tailed-scorpion

இனி வரும் காலங்களில் விபத்தில் அதிக ரத்தம் வெளியேறி யாருமே உயிரிழக்க கூடாது என்ற ஒரு நல்ல நோக்கத்திற்கு இந்த கொடிய தேளின் விஷம் மிகப்பெரிய அளவில் பயன்பட போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com