நாம் வெகு விரைவில் பயணிக்க விமானப் பயணம் உதவுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் மிக உயரமான இடங்களுக்குப் பயணிக்க முடிகிற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் விமானம் பறக்க முடியாத சூழலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி உள்ள ஒரு இடம்தான் திபெத்திய பீட பூமி ஆகும். இதை உலகின் கூரை என்று குறிப்பிடுகிறார்கள்.
இது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு பரந்த உயரமான பகுதியாகும். இது தோராயமாக 2.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதன் தனித்துவமான புவியம்சம் விமானிகளுக்கு பல சவால்களை முன் வைக்கிறது.
இது வணிக விமானங்கள் மேலே பறப்பதை கடினமாக்குகிறது. விமானங்கள் திபெத்திய பீடபூமியைத் தவிர்ப்பதன் காரணம் அதன் மலைக்க வைக்கும் உயரம் தான். அதிக உயரமாக இருப்பதால் காற்று மிகவும் மெல்லியதாக உள்ளது. இது விமான இயந்திரங்களின் செயல் திறனைப் பாதிக்கலாம். ஜெட் என்ஜின்கள் காற்றின் குறிப்பிட்ட அடர்த்தியை நம்பியிருக்கின்றன.
மேலும் உயரங்களில் ஆக்சிஜன் குறைவு இயந்திர செயல்திறன் குறைவுக்கு வழி வகுக்கும். இதனால் சிக்கல் ஏற்படும். மற்றொரு குறிப்பிடத்தக்க காரணி வானிலை. திபெத்திய பீடபூமி இதன் கடுமையான, கணிக்க முடியாத வானிலைக்குப் பெயர் பெற்றது. பலத்த காற்று, கடுமையான கொந்தளிப்பு மற்றும் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் விமானங்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வானிலை விமானிகளுக்கு பாதுகாப்பாக பயணிப்பதை கடினமாக்குகிறது.
திபெத்திய பீடபூமியில் நிலப்பரப்பு மிக முக்கிய காரணியாககும். இப்பகுதி கரடுமுரடான மலைகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள சிகரங்கள் 7000 மற்றும் 8848 மீட்டர் உயரமுள்ளவை. ஆகையால் திடீரென்று விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டால் தரையிறக்க தளங்களாக இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது. இங்கு மக்கள் தொகை குறைவாகவே உள்ளது. மேலும் இந்த பீடபூமி ஒரு அரசியல்ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதியில் உள்ளது. அரசியல் பட்டங்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவைகள் மற்றும் பிராந்தியத்தில் விமானங்களுக்கான பிற ஆதரவு கிடைப்பதை பாதிக்கலாம். மேலும் இது விபத்துக்கள் நடக்கும் இடமாக இருப்பதால் இங்கு விமானம் பறக்க முடிவதில்லை.