
டேவிட் கோக்கின்ஸ் (David Goggins) எழுதின “Can't Hurt Me” புத்தகம் வெறும் ஒரு சுயசரிதை இல்ல. அது நம்ம மனசை ஒரு இரும்பு மாதிரி எப்படி உருவாக்குவதுன்னு சொல்லித் தரும் ஒரு வழிகாட்டி. இந்த புத்தகத்தோட தலைப்பே அதன் மையக்கருத்தை சொல்லும்: உன்னால என் உடம்பை காயப்படுத்தலாம், ஆனா என் மனசும் என் மன உறுதியும் அவ்வளவு சீக்கிரத்துல காயப்படாது.
வாழ்க்கைல நமக்கு வர கஷ்டங்கள், தோல்விகள், மத்தவங்க பேசற அவமானமான வார்த்தைகள் இதெல்லாம் நம்ம மனசுக்குள்ள நுழைஞ்சு நம்மள காயப்படுத்த முடியாதுன்னு இந்த புத்தகம் சொல்லுது. இத எப்படி செய்யறதுன்னு கோக்கின்ஸ் அவருடைய சொந்த வாழ்க்கையிலிருந்து உதாரணமா பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
நம்ம வாழ்க்கைல எதுக்குமே நொண்டி சாக்குகள் சொல்லிக்கிட்டு, பயந்துக்கிட்டு, மனசுல ஒரு பாதுகாப்பான இடத்திலேயே இருக்கிற பல பேருக்கு இந்த புத்தகம் ஒரு திறவுகோல் மாதிரி இருக்கும். உங்களுக்குள்ள ஒரு பெரிய சக்தி இருக்கு, ஆனா அத நீங்களே மூடி வச்சிட்டு இருக்கீங்க.
அந்த சக்தியை எப்படி வெளியே கொண்டு வர்றதுன்னு இந்த புத்தகம் கத்துக்கொடுக்கும். கனவுகள், இலக்குகள், ஆசைகள்னு நிறைய இருக்கும், ஆனா அதுல ஒன்னு கூட ஜெயிக்க முடியாம போச்சுன்னா, நீங்க உங்க மனசை எப்படி தயார் செய்யணும்னு இந்த புத்தகம் சொல்லும்.
இந்த புத்தகத்திலிருந்து நம்ம கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. அதுல முக்கியமான ஒன்னு, நம்ம மனச நம்மளே கண்காணிச்சு, நம்மள நாமே கணக்குக் கேட்கணும். ஒரு வேலை செய்ய பயமா இருந்தா, ஏன் பயமா இருக்குன்னு யோசிக்கணும். அதுதான் Accountability.
அப்புறம், எந்த ஒரு கஷ்டமான விஷயத்தையும் ஒரு சந்தோஷமான சவாலா பாக்கணும்னு கத்துக்கொடுக்கிறார். நம்ம எல்லோருக்கும் கஷ்டமான நேரங்கள், சோகமான நிகழ்வுகள், அவமானங்கள்னு பல விஷயங்கள் வாழ்க்கையில இருக்கும். இந்த விஷயங்களை மனசுல வச்சுக்கிட்டு, அதையெல்லாம் உத்வேகமா எப்படி மாற்றுவதுனு சொல்லியிருக்கிறார்.
இந்த புத்தகத்தோட முக்கியமான கருத்து இந்த “40% விதி”தான். கோக்கின்ஸ் என்ன சொல்றாருன்னா, ஒரு வேலை செய்யும்போது உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, போதும்னு உங்க மனசு சொல்லுச்சுன்னா, நீங்க உங்களோட சக்தில வெறும் 40% மட்டும்தான் பயன்படுத்தியிருக்கீங்கனு அர்த்தம்.
இன்னும் 60% உங்களோட மன உறுதியால வெளியே கொண்டு வர முடியும். இது உடம்புக்கு மட்டும் இல்ல, மனசுக்கும் இது பொருந்தும். ஒரு விஷயத்துல தோல்வி அடைஞ்சுட்டோம்னு ரொம்ப சோர்வா இருந்தா, அது நம்மளோட 40% மட்டும்தான். இன்னும் போராடுற சக்தி நம்மகிட்ட இருக்கு.
முதல் விஷயம், சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்தே ஆரம்பிக்கலாம். தினமும் காலையில சீக்கிரமா எழுந்திருக்கிறது, செய்யறதுக்கு கஷ்டமான ஒரு வேலைய முதல் வேலையா செய்வது, அப்புறம் உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமா இருந்தா கூட ஒரு 10 நிமிஷம் ஓடிட்டு வரதுனு இப்படி சின்ன சின்ன சவால்களை எடுத்துக்கலாம். இதெல்லாம் நம்ம மனசை இன்னும் உறுதியாக்கும்.
அப்புறம், ஒரு list உருவாக்கணும். நீங்க வாழ்க்கையில் சாதிச்ச விஷயங்கள், கஷ்டமான நேரத்தில் இருந்து மீண்டு வந்த கதைகள்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சுக்கங்க. அதுதான் நீங்க சோர்ந்து போகும்போதெல்லாம் உங்க மனசுக்கு சக்தி கொடுக்கும்.
“Can't Hurt Me” புத்தகம் படிக்கிறது அது உங்களுடைய வாழ்க்கையையே புதுசா ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கும். சோ, இந்த புத்தகத்தை படியுங்க, உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்குங்க.