
செல்போன்கள் தற்போது மக்களிடையே தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது. முன்பு வீட்டில் ஒருவரிடம் இருந்த செல்போன் இப்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒருசிலர் 2 செல்போன்களை கூட உபயோகிக்கிறார்கள். இந்த வகையில் செல்போன் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வைத்துக்கொள்ளும் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் (Foldable smartphones) என்பது மடிப்பு வடிவக் காரணி கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது பல முந்தைய ஃபீச்சர் போன்களின் கிளாம்ஷெல் (அல்லது "ஃபிளிப் போன்") வடிவமைப்பை நினைவூட்டுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வழக்கமான போன்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும், ஏனென்றால் அவை மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளன.
சமீபகாலமாக மடிக்கக்கூடிய தொடுதிரை ஸ்மார்ட்போன்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. 2026க்குள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஆண்டுதோறும் 52% வளர்ச்சியடையும் என்று CMR நிறுவனம் கணித்துள்ளது.
அதில் சிறப்பானவற்றை தெரிந்து கொள்வோம்.
சாம்சங் கேலக்ஸி ஜி பிலிப் 6:
இயல்பான தொடுதிரை போனை போல தோன்றும் இது, இரண்டாக மடிக்கக்கூடியது. இதுமட்டுமின்றி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால் பல்வேறு வேலைகளை சுலபமாக்கி உள்ளனர். போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங், வேலைகளை சுலபமாக்கும் ஏ.ஐ. செயல்பாடுகள் என... ஸ்மார்ட்போனை கூடுதலாக ஸ்மார்ட்டாக்கி உள்ளனர். இந்த போன் மின்ட், மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
ஸ்நாப்டிராகன் 8 ஜென் 3 புராசசர், 256 GB மற்றும் 512 GB உள்ளடக்கக் கொள்ளளவு, 12 GB RAM மற்றும் 5G நெட்வொர்க் ஆதரவு, 50 எம்.பி. புரோ லெவல் கேமரா, 4000mAh பேட்டரி, 25W சார்ஜிங்... இவற்றுடன், மடிக்கக்கூடிய அம்சமும் இந்த ஸ்மார்ட்போனை ஸ்பெஷலாக காண்பிக்கிறது. இதன் விலை ரூ.89,999 முதல் ரூ.101,999 வரை உள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 40:
மோட்டோரோலா ரேசர் 40 என்பது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும், இது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய போன்களுக்கு போட்டியாக மோட்டோரோலா ரேசர் 40 அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரீமியம் வேகன் லெதர் டிசைன், 6.9 அங்குல போலெட் தொடுதிரை, 1400 நிட்ஸ் வெளிச்சம் திறன், 3.6 இன்ச் AMOLED திரை, ஸ்நாப்டிராகன் 7 ஜென் 1 புராசசர், 64 எம்.பி. மற்றும் 13 எம்.பி. கேமராக்கள், 8GB RAM, 256GB சேமிப்பு, 4200 எம்.ஏ.எச். பேட்டரி, 30 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம்... என ரூ.54,999 விலையில் மடங்கும் திறனுடன், பல்வேறு வசதிகளுடன் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ பிலிம்:
இன்பினிக்ஸ் ஜீரோ 30 5G போன்களுக்கான பிலிம் (screen protector) பல வகைகளில் கிடைக்கின்றன. அவை டெம்பர்ட் கிளாஸ், ஹைட்ரோஜெல் பிலிம் போன்றவற்றை உள்ளடக்கியவை. இவை போன் திரையை கீறல்களிலிருந்தும், சேதரிப்பிலிருந்தும் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், சில பிலிம்கள் ஆன்டி-மைகிரோபியல் பூச்சுகளுடன் வருகின்றன, அவை பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை விரட்ட உதவுகின்றன.
இன்பீனிக்ஸ் நிறுவன தயாரிப்பான இது 8 ஜி.பி.ரேம், 512 ஜி.பி. உள்நினைவக வசதியுடன் மடிக்கக்கூடிய பட்ஜெட் போனாக வந்திருக்கிறது. 6.9 அங்குல முழு எச்.டி.தொடுதிரை, பின்பக்கம் இரு 50 எம்.பி. கேமராக்கள், முன்பக்கம் 50 எம்.பி.செல்பி கேமரா, 4720 எம்.ஏ.எச்.பேட்டரி... இவற்றுடன் ரூ.49,999 விலையில் விற்பனையாகிறது.