மின்சார கார்கள் முதல் ஹைபர்லூப், ட்ரோன் வரை: போக்குவரத்து தொழில்நுட்பம் - புதிய உலகம்!

மின்சார கார்கள், தன்னாட்சி வாகனங்கள், ஹைபர்லூப், ட்ரோன், ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகள் வரை – தூய்மையான, வேகமான, பாதுகாப்பான பயணத்தால் வாழ்க்கை தரத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உயர்த்தும் புதிய போக்குவரத்து புரட்சி.
future-transport-tech
future-transport-tech
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

போக்குவரத்து தொழில்நுட்பம் என்பது வெறும் பயணத்திற்கான கருவியாக இல்லாமல், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும், ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

மின்சார மற்றும் தன்னாட்சி வாகனங்கள் EVs & Autonomous Vehicles:

மின்சார வாகனங்கள் மற்றும் தன்னாட்சி வாகனங்கள் போக்குவரத்துத் துறையை முற்றிலும் மாற்றி, தூய்மையான மற்றும் திறமையான பயணத்தை உறுதி செய்கின்றன. EVs புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து காற்று மாசுபாட்டை குறைக்கிறது. அதேசமயம் தன்னாட்சி வாகனங்கள் AI, சென்சார்கள் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி மனித உதவியின்றி பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குகின்றன.

இந்த தொழில்நுட்பங்கள் விபத்துக்களை குறைத்து, போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க உதவுகின்றன. சாலை பாதுகாப்பை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பேட்டரியால் இயங்கும் கார்கள் மற்றும் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பையும் ஆற்றல் செயல்திறனையும் அதிகரிக்கின்றன.

அதிவேக ரயில்கள் மற்றும் Hyperloop:

நிலப்பரப்பில் மிகக் குறுகிய நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய மேக்லெவ் (Maglev) ரயில்கள் மற்றும் 'ஹைபர்லூப்' தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்து கின்றன. இவை பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் அதிநவீன அமைப்புகளாகும். மணிக்கு 300-350 கிலோமீட்டர் வேகம் செல்லும் ரயில்களைவிட, வெற்றிடக் குழாய்களில் காந்தவிசையால் 1000 கி.மீ./மணிக்கு மேல் செல்லும் ஹைப்பர்லூப் அதிக வேகம் மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு கொண்டது. ஹைபர்லூப் மூலம் மும்பை-புனே பயணத்தை 25 நிமிடங்களில் முடிக்க முடியும்.

ட்ரோன் தொழில்நுட்பம் Drone Technology:

ஆளில்லா வான்வழி வாகனங்கள் பொருட்களை விநியோகிக்கவும், கண்காணிப்பிற்கும், அவசரகால உதவிகளுக்கும் பயன்படுகின்றன. இது போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, மருந்துகள், அவசரப்பொருட்கள் மற்றும் பார்சல்களை மிகக் குறைந்த நேரத்தில் கொண்டு சேர்க்க உதவுகிறது. இவை நிலவழிப் போக்குவரத்தைவிட வேகமானது. உழைப்புச் செலவு குறைவு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. எதிர்காலத்தில் தன்னாட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் ட்ரோன் வினியோகச் சங்கிலி மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இனி தேவையில்லை? உங்கள் கையில் இருக்கும் இந்த 'Magic Apps' பற்றித்தெரியுமா?
future-transport-tech

ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகள் ITS:

ITS என்பது நவீன நகரங்களில் உள்ள போக்குவரத்து சிக்கல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணும் ஒரு அமைப்பாகும். போக்குவரத்து நெட்வொர்க்குகளை பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும், நிலையானதாகவும் மாற்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சென்சார்கள், தரவு பகுப்பாய்வு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றை பயன்படுத்தும் இந்த நவீன அமைப்பின் மூலம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். நிகழ்நேரத் தரவு (Real-time data) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் loT ஆகியவற்றைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயண நேரத்தை மேம்படுத்துகின்றன.

விண்வெளி போக்குவரத்து Space Transportation:

விண்வெளி போக்குவரத்து SpaceX Starship போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மூலம், புவி சுற்றுப்பாதை மற்றும் கண்டங்களுக்கு இடையிலான பயணங்களை மிக அதிவேகமாக்கி உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மனிதர்கள் மற்றும் சரக்குகளை விண்வெளிக்கு கொண்டு செல்வதோடு, எதிர்கால விண்வெளி சுற்றுலாவுக்கும் வழி வகுக்கிறது. நாசா போன்ற நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் மேம்பட்ட நிலையான இறக்கை விமானங்களை உருவாக்கி வருகின்றன.

ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பழைய முறை மாறி, முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்கள் சோதிக்கப் படுகின்றன. இது விண்வெளி பயணத்தின் செலவை பெருமளவு குறைக்க உதவும். விண்வெளி போக்குவரத்தில் செலவு குறைந்த மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இனி நிலவுக்கு ஈஸியா போகலாம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ரகசிய பாதை!
future-transport-tech

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் போக்குவரத்து தொழில்நுட்பம்:

சென்னை மெட்ரோ போன்ற நவீன ரயில் போக்குவரத்து மற்றும் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 

தமிழக அரசு ரூபாய் 2.5 லட்சம் கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டங்கள் (CMP) மற்றும் புதிய பேருந்து அறிமுகங்கள் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. 

இந்தியாவில் Jio Brain போன்ற AI  தொழில்நுட்ப முதலீடுகள் போக்குவரத்து மேலாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்துகின்றன.

logo
Kalki Online
kalkionline.com