Gemini AI: சாதகங்களும், பாதகங்களும்!

Gemini AI
Gemini AI

Gemini AI google நிறுவனத்தின் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமாகும். தொடக்கத்தில் இதில் பல பிரச்சினைகள் இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு தற்போது மக்கள் மத்தியில் குறிப்பிட்டதக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் போலவே இதற்கும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. அவற்றைப் பற்றிய முழு தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். 

Gemini AI-ன் நன்மைகள்: 

ஜெமினி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், இணையத்தில் உள்ள பலதரப்பட்ட தரவுகளை ஆராய்ந்து சிக்கலான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பல செயல்முறைகளை ஆட்டோமேஷன் செய்தல், மனிதர்களின் பிழையை குறைத்தல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல் போன்றவற்றை செய்யலாம். மேலும் இது சுகாதாரம், நிதி மற்றும் உற்பத்தி போன்ற பல துறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் திறனைக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஜெமினி AI-ல் மேம்பட்ட மெஷின் லேர்னிங் திறன்களை இணைத்துள்ளது. இதனால் தரவுகளை வேகமாக பகுப்பாய்வு செய்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். 

தனி நபர்களின் பயன்பாட்டுக்கு இது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சத்தை இ-காமர்ஸ், பொழுதுபோக்கு மற்றும்  சமூக வலைதளங்கள் போல பயனர்களுக்கு திருப்தியான உணர்வை வழங்கும். 

Gemini AI ஆனது மருத்துவத் தரவுகளை பகுப்பாய்வு செய்து, நோயை கண்டறிதல் மற்றும் சுகாதார நிலைமைகளை தெரிவித்தல் போன்ற சுகாதாரத் துறையில் பெரும் புரட்சியை கொண்டு வரும் ஆற்றல் மிக்க அம்சமாகும். நோயாளிகளின் தகவலை இதில் உள்ளீடு செய்தால் போதும், மருத்துவர்களுக்கு தேவையான தகவல்களை துல்லியமாக கண்டறிந்து நோய்க்கான சிகிச்சை திட்டங்களையும் வகுத்துக் கொடுக்கிறது. 

Gemini AI-ன் தீமைகள்: 

மற்ற AI டூள்களைப் போலவே ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் சில பாதகங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் பயனர்களுக்கு இணையத்திலிருந்து தவறான தரவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது. மேலும் இதனால் தனியுரிமைக் கவலைகளும் இருப்பதால் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. 

இதன் அதிகரித்த ஆட்டோமேஷன் திறன்களால் பலரது வேலை பறிபோகும் வாய்ப்புள்ளது. முன்னர் மனிதர்களால் செய்யப்பட்ட பணிகள் இப்போது ஏஐ அமைப்புகளால் கையாளப்படுகின்றன. இது வேலை இழப்புக்கு வழிவகுத்து, பணிச்சூழலை மோசமானதாக மாற்றுகிறது.  

இது முழுவதும் தரவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்பதால், மனிதர்களைப் போல உணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் இதற்கு இல்லை. சில மோசமான சூழ்நிலைகளில், உள்ளுணர்வு போன்ற விஷயங்களும் தேவைப்படலாம். இவை ஜெமினி போன்ற ஏஐ அமைப்புகளிடம் இல்லை. 

இதையும் படியுங்கள்:
Emergency Funds: அவசரகால நிதியின் முக்கியத்துவங்கள்!
Gemini AI

ஜெமினி AI-ன் செயல்திறன் தரவுகளின் தரத்தைப் பொறுத்து அமையும் என்பதால், தரவுகளைத் தாண்டி இவற்றால் முடிவுகளை எடுக்க முடியாது. இதற்குத் தேவையான தரவுகள் குறைவாக இருந்தால் மோசமான முடிவுகளைக் கொடுக்கலாம். எனவே 100% இந்தத் தொழில்நுட்பத்தை நாம் நம்பிவிட முடியாது.

எனவே, மற்ற ஏஐ அமைப்புகளைப் போலவே ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இதன் சாதக பாதகங்கள் இரண்டையும் கணக்கில் கொண்டு, பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com