Google Calendar பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை!

Google Calendar users beware
Google Calendar users beware
Published on

Google Calendar பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள் விரைவில் உங்களின் சாதனத்தை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுடைய செயலி காணாமல் போய்விடும் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

கூகுள் காலண்டர் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலியாகும். அதாவது இந்த செயலியை பயன்படுத்தி மீட்டிங்கை திட்டமிடுவது, ஈவண்டுகளை உருவாக்குவது மற்றும் நோட்டிபிகேஷன் அமைப்பது போன்ற வேலைகள் எளிமையாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த செயலிக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது. 

நீங்கள் ஆண்ட்ராய்டு OS-ன் பழைய வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தால் விரைவில் அந்த ஃபோன்களில் காலண்டர் ஆப் ஆதரவை நிறுத்தப் போவதாக கூகுள் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 8.0-க்கு மேற்பட்ட ஓஎஸ் கொண்ட சாதனம் பயன்படுத்தினால் கூகுள் காலண்டருக்கு எந்த சிக்கலும் இல்லை. இதுவே அதற்கு கீழே உள்ள இயங்குதளத்தை பயன்படுத்தினால் அவற்றில் கூகுள் காலண்டர் செயலி விரைவில் நிறுத்தப்பட உள்ளது. 

இதையும் படியுங்கள்:
கேப் புக்கிங் முதல் மளிகை பொருள் வரை இனி வாட்ஸ்அப்பில்!
Google Calendar users beware

இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்றால், அந்த இயங்குதளங்களில் பாதுகாப்பு கவலைகள் அதிகம் உள்ளது. தற்போதைய நவீன இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றில் பாதுகாப்பு குறைபாடு அதிகம் இருக்கும். அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களில் சாதனத்தை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பழைய இயங்குதளங்களுக்கு அவ்வப்போது கொடுக்கப்பட வேண்டிய புதிய அப்டேட்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக அவற்றிற்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்காததால் ஹேக்கிங் தாக்குதலில் அவை சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. 

எனவே உங்கள் சாதனத்தில் தொடர்ந்து கூகுள் காலண்டர் வேலை செய்ய வேண்டும் என்றால், உங்கள் சாதனத்தின் இயங்குதளத்தை உடனடியாக அப்டேட் செய்யுங்கள். இது உங்கள் சாதனத்தில் கூகுள் காலண்டரை தக்க வைப்பது மட்டுமின்றி, உங்கள் சாதனத்தின் முழு பாதுகாப்பையும் அதிகரிக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com