கூகுள் கிளாக் நியூ அப்டேட்: அலாரத்துடன் வானிலை முன்னறிவிப்பு!

Google Clock
Google Clock

கூகுள் கிளாக் அலாரத்துடன் வானிலை முன்னறிவிப்பை தெரிவிக்கும் கூடுதல் அம்சங்களைக் கொண்ட அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தினுடைய செயலிகளில் பல்வேறு கூடுதல் அம்சங்களை தொடர்ச்சியாக இணைத்து வருகிறது. இதற்காக தொடர்ச்சியாக பல்வேறு வகையான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கூகுள் கிளாக் செயலியில் புதிய அம்சங்களை இணைத்து புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.

கூகுள் கிளாக் வி 7.6 என்ற அப்டேட்டை எனெபிள் செய்த பிறகு அலாரத்துடன் இணைந்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு வகையான தகவல்களை பரிமாறும் வகையிலும் கூடுதல் அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இது மட்டும் அல்லாது இதன் மூலம் கூகுள் வாட்சுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் இடம்பெற்று இருக்கிறது.

இதனால் பயனாளர்கள் கூடுதலான பயன்களை பெற முடியும். மேலும் கூகுள் கிளாக்கின் இந்த நியூ அப்டேட் மூலம் நினைவூட்டல்கள் செய்ய முடியும் மற்றும் பல்வேறு வகையான தகவல்களை குறித்த நேரத்தில் பரிமாறவும் முடியும்.

இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு வகை ஃபோன்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அனைத்து வகை ஃபோன்களிலும் இந்த அம்சம் வழங்கப்படும். மேலும் அலார சேவையை பிற செயலிகளில் இணைக்க கூகுள் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நியூ அப்டேட்டுகள் மூலம் பயனாளர்கள் எதற்காக அலாரம் வைத்துள்ளனர் என்பதை பதிவு செய்தால் அதற்கான தொழில்நுட்ப ரீதியான உதவிகளை கூகுள் நிறுவனம் ஆலோசனையாக வழங்கும் வகையிலும் அந்த புதிய அம்சம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com