கூகுளின் புதிய AI தொழில்நுட்பம்… இனி மீம்ஸ் உருவாக்குவது ரொம்ப ஈசி!

Google AI meme generator
Google AI meme generator
Published on

தற்கால உலகில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தகவல்களைத் திரட்டுவது, மொழிபெயர்ப்பது, போக்குவரத்து நெரிசலை முன்கணிப்பது என பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தனது முத்திரையை பதித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி சில நேரங்களில் வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வசதிகளுக்கும் வழிவகுக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில், கூகுள் நிறுவனம் தனது ஜிபோர்டு கீபோர்டில் செயற்கை நுண்ணறிவு மூலம் மீம் உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி பயனர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில், டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நொடிகளில் மீம்களை உருவாக்க முடியும். நண்பர்களுடன் உரையாடும்போது, பொருத்தமான மீம்களை உடனடியாகப் பதிலுக்கு அனுப்ப இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்பு மீம்ஸ் உருவாக்குவதற்கு செலவழித்த நேரத்தையும் உழைப்பையும் இது குறைக்கும்.

சமீபத்தில், சாட்ஜிபிடி போன்ற தளங்கள் பயனர்கள் கேட்கும் விதவிதமான படங்களை உருவாக்கி தந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஜப்பானிய அனிமேஷன் பாணியிலான படங்கள் இணையத்தில் வைரலாக பரவின. இந்த வெற்றியின் உந்துதலில், கூகுளும் தனது பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீம்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். ஒரு கருத்தை சுருக்கமாகவும், அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் வெளிப்படுத்த மீம்ஸ்கள் சிறந்த கருவியாக விளங்குகின்றன. பல பக்கங்களில் விவரிக்க வேண்டிய விஷயத்தைக்கூட ஒரு சில வரிகள் மற்றும் ஒரு படத்துடன் எளிதாக புரிய வைத்துவிடும் சக்தி மீம்ஸ்களுக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
Breakup Quotes: ஒரு புதிய தொடக்கத்திற்கான ஊக்க வார்த்தைகள்!
Google AI meme generator

கூகுளின் இந்த புதிய முயற்சி, மீம் உருவாக்கும் முறையை மேலும் எளிதாக்கி, அனைவரையும் மீம் கிரியேட்டர்களாக மாற்றும் என்று நம்பலாம். இதன் மூலம், சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரிமாற்றம் இன்னும் வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. செயற்கை நுண்ணறிவின் இந்த புதிய அவதாரம், இணைய உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
தக்காளி காய்ச்சல் - குழந்தைகளைத் தாக்கும் புதிய வகை வைரஸ்!
Google AI meme generator

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com