தக்காளி காய்ச்சல் - குழந்தைகளைத் தாக்கும் புதிய வகை வைரஸ்!

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தக்காளி காய்ச்சல் தற்போது குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது என்கின்றன மருத்துவ குறிப்புகள்.
Tomato fever
Tomato fever img credit - factchecker.in
Published on

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தக்காளி காய்ச்சல் தற்போது குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது என்கின்றன மருத்துவ குறிப்புகள். இங்கு அதைப்பற்றி காண்போம்.

ஒரு வித வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த புதிய வகை காய்ச்சலால் உடலில் உருவாகும் அம்மை நோயை நினைவுபடுத்தும் தக்காளி ஒத்த சிவப்பு நிறக் கொப்புளங்கள் காரணமாக இது தக்காளிக் காய்ச்சல் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில், இந்த நோய் முதன்முதலில் கேரளாவில் மே 6, 2022 அன்று கண்டறியப்பட்டதாக தகவல் உண்டு.

தக்காளி காய்ச்சலுக்கான காரணங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ்களால் ஏற்படுவதாகவும் குறிப்பாக சிக்குன்குனியாவை ஏற்படுத்தும் வகை வைரஸ்களால் இந்த பாதிப்பு தோன்றும் எனவும் கருதப்படுகிறது. இக்காய்ச்சல் வயதில் பெரியவர்களை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது என்பதால் குழந்தைகள் மீதான கவனம் இக்காலத்தில் அதிகம் தேவை.

அதிக காய்ச்சல், தடிப்புகள், கடுமையான நீரிழப்பு, சோர்வு, மூட்டு வலி, உடல் வலி, சிவப்பு நிறத்தில் வலியுடன் திரவம் நிறைந்த கொப்புளங்கள் , மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல், தோல் எரிச்சல், பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகளாக இருந்தாலும் இது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை என்பது ஆறுதல் தருகிறது.

அதே சமயம் இதை எப்படி தவிர்ப்பது என்பதிலும் கவனம் தேவை. இது வெயில் காலமென்பதால் சாதாரணமாகவே தண்ணீர் அதிகம் குடிப்பது பல்வேறு நலப்பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காக்கும். அதிலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது கவனித்து தண்ணீர் தர வேண்டியது அவசியம். அதே போல தேவையான ஓய்வு மற்றும் தூக்கம் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் சத்தான உணவை உண்ணுதல் முக்கியம்.

மேலும் மருத்துவ ஆலோசனையுடன் கொப்புளங்களிலிருந்து நீர் வடியாமல் பார்த்துக் கொள்வதும் தகுந்த மருந்துகள் எடுப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

வரும் முன் தடுக்க சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், தும்மும்போது அல்லது இருமும்போது கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது மற்றும் தொடர்ந்து கைகளை கழுவுதல் போன்ற உடல் சுகாதாரத்தைப் பராமரிப்பது பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பது, உடைகள் மற்றும் படுக்கையை தனித்தனியாக வைத்து அவற்றைத் தூய்மையாக வைப்பதும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் போன்ற வழிமுறைகள் காய்ச்சல் வராமல் தடுக்கவும் வந்தாலும் மற்றவருக்குப் பரவாமலும் எச்சரிக்கையாக இருக்கலாம்.

இந்தக் காய்ச்சல் வந்தால் குணமாக சுமார் பத்து நாட்கள் வரை ஆகும் என்பதால் அடிக்கடி வெவ்வேறு மருத்துவத்தை நாடாமல் குணமடையும் வரை பொறுமையைக் கடைப்பிடித்து மருத்துவர் ஆலோசனை கேட்பது நல்லது.

எந்த உடல் பாதிப்பாக இருந்தாலும் அச்சம் கொள்ளாமல் அதற்கான தீர்வுகளை தகுந்த மருத்துவ நிபுணர் மூலம் அறிந்து நலம் பெறுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
இந்தியக் குழந்தைகளைத் தாக்கும் மயோபியா… அதிர்ச்சி ரிப்போர்ட்!
Tomato fever

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com