Google Pay Vs Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது கூகுள் வாலெட்… இத்தனை அம்சங்கள் இருக்கா? 

Google Pay Google Wallet logo
Google Pay Vs Google Wallet
Published on

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பேமென்ட் அம்சங்கள் நமது பணப் பரிவர்த்தனை முறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக google நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை செயலியான google pay அறிமுகமானதிலிருந்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிதாக Google Wallet என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதைத் தற்போது எல்லா பயனர்களும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஏற்கனவே google pay இருக்கும்போது, ஏன் கூகுள் வாலெட் செயலி அறிமுகம் செய்ய வேண்டும்? என பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில், google வாலாட்டு செயலியில் கூடுதலாக சில அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

கடந்த 2011ஆம் ஆண்டு Tez என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட google-ளின் பணப்பரிவர்த்தனை செயலி, பின்னர் 2018 ல் google pay என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே மக்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மேலும் பல பரிவர்த்தனை செயலிகள் கொண்டுவரப்பட்டாலும், கூகுள் பே செயலியை அதிகமான நபர்கள் பயன்படுத்தி வந்தனர். 

ஆனால் இப்போது google வாலெட் என்ற மற்றொரு பணப்பரிவர்தனை செயலியை google நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், google pay செயலியின் பயன்பாடு குறையும் என சொல்லப்பட்டது. ஆனால் google pay செயலிக்கு  எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது வழக்கம் போல பணப்பரிவர்த்தனைகளுக்கு செயல்படும். ஆனால் google pay செயலியில் செய்ய முடியாத சில கூடுதல் விஷயங்களை google வாலெட் செயலி மூலமாக செய்ய முடியும். 

google வாலெட் அம்சங்கள்: 

  1. முதற்கட்டமாக google வாலெட் செயலியில் Protection மற்றும் தொலைதூரத்தில் இருந்தே திருடப்பட்ட டிவைஸ் சேவையை முடக்கும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 

  2. பயனர்கள் தங்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் விவரங்களை google வாலெட் அக்கவுண்டில் சேமித்துக் கொள்ள முடியும். 

  3. google வாலட்டைப் பயன்படுத்துபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எளிதாக பணம் அனுப்புவது மட்டுமின்றி, மொபைல் எண், ஈமெயில் ஐடி பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம். அதேபோல மற்றவர்களிடமிருந்தும் நேரடியாக google வாலெடு கணக்கிற்கு பணத்தைப் பெறலாம். 

  4. இந்த செயலி போன் பே, google pay, paytm போன்ற செயல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காண்டாக்ட் லெஸ் முறையில் இதன் மூலமாக பணம் செலுத்தலாம். 

  5. உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம். 

  6. இறுதியாக, இணையத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கும்போது செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இதன் மூலமாக எளிதாகிறது. 

இதையும் படியுங்கள்:
குறைந்த பராமரிப்பு தேவைப்படும் உட்புற தாவரங்கள்! 
Google Pay Google Wallet logo

இப்படி பல அம்சங்களைக் கொண்ட google வாலெட் செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டாலும், இன்னும் எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com