குறைவான ஒலியுடன் கூடிய பசுமை பட்டாசுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

அதிக ஒலி மற்றும் காற்று மாசைத் தவிர்க்கும் பசுமை பட்டாசுகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.
பசுமை பட்டாசுகள் - Green Crackers
பசுமை பட்டாசுகள் - Green CrackersImage credit:Gemini
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

பண்டிகை என்றாலே பட்சணங்களும், வெடிகளும், புத்தாடைகளும் தான் ஞாபகத்துக்கு வரும். ஒவ்வொரு பண்டிகையை கொண்டாடும் போதும் நாம் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ நம் நீர்நிலைகள், சுற்றுப்புறங்களை குப்பைகளாக்கி சுற்றுசூழல் மாசை உண்டாக்கிவிடுகிறோம்.

இயற்கையை தொடர்ந்து மாசுபடுத்துவதாலேயே பெரும் சீற்றங்களும், பேராபத்து களும் நிகழ்கின்றன. இதை தடுக்க சிறுவர் முதல் பெரியவர் வரை நம் மைச்சுற்றி‌மாசு ஏற்படுத்தாத வாறு நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வோம்.

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் வான வேடிக்கைகளும் அதனால் உண்டாகும் ஒலி, ஒளி மாசைக் கட்டுப் படுத்த பெருமுயற்சி எடுத்துக்கொள்கின்றனர். இயற்கை ஆர்வலர்களும், ஆட்சியாளர்களும். தனிமனித விழிப்புணர்வு மட்டுமே இயற்கையை தொந்தரவு செய்யாமல் நம்மால் இயன்ற நன்மையை சமூகத்துக்கு செய்ய இயலும்.

சாதாரணமாக நாம் அதிக ஒலி, ஒளி ஏற்படுத்தும் பட்டாசு, வெடி வகைகளை தவிர்த்து பசுமை பட்டாசுக்கு மாறுவோம். பசுமை பட்டாசு என்பது சீன பட்டாசில் இருப்பதைவிட சில வேதிப் பொருட்கள் தவிர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் புகை குறைவாக நச்சுக்காற்று உருவாவது தடுக்கப்படுகிறது.

பசுமை பட்டாசுகள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. ஏனெனில் அவை குறைந்த மாசுபடுத்தும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் படுகிறது. பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான ஒளி, ஒலி மாசு உண்டாகுமாறு உள்ளது.

பெரும்பாலான பாரம்பரிய பட்டாசுகளில் ஆர்சனிக், லித்தியம் மற்றும் பேரியம் போன்ற ‌சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் பசுமை பட்டாசுகளில் இந்த ரசாயனங்கள் உபயோகிக்க மாட்டார்கள்.

பசுமை பட்டாசுகள் - Green Crackers
பசுமை பட்டாசுகள் - Green Crackers

பசுமை பட்டாசுகளை அலுமினியம், ஈயம் மற்றும் கார்பன் ஆகியன கொண்டிருக்கும். இது புகை வெளியிடுவதை பெரும்பாலும் கட்டுப்படுத்துகிறது.

இந்த வகை பட்டாசுகள் வெடிக்கும்போது நீராவி வெளிப்படுகிறது. இந்த வகை நீராவி புகை மற்றும் தூசகளை கட்டுப்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படுகிறது.

பாரம்பரிய பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160டெசிபல் சத்தம் வெளிவரும். ஆனால் இந்த வகை பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது 110டெசிபல் சத்தம் மட்டுமே வெளியாகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

அவை பாதுகாப்பான நீர் வெளியீடு, பாதுகாப்பான தெர்மைட் க்ராக்கர், 50முதல்60சதவிகிதத்திற்கும் குறைவான அலும னியம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பசுமை பொட்டாசியம் அவற்றின் கியூ ஆர் குறியீடு மற்றும் பேக்கேஜிங் ல் சி எஸ் ஐ ஆர்டெஸ்டட் என சான்றிதழில் கொடுக்கப்பட்ட பச்சை லோகோ மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

பல‌ இடங்களில் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. காற்று மாசை உண்டாக்கும் அதிக ஒளி, ஒலி தரும் பட்டாசுகளை தவிர்த்து , சூழலுக்கு பாதுகாப்பான பசுமை பட்டாசுகளை வெடித்து பண்டிகையை பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

வெடி வெடிப்பதற்கு சொல்லப்பட்ட நேரத்தில் மட்டும் வெடிப்போம். வெடித்து முடித்ததும் பேப்பர் மற்றும் கம்பிகள், குப்பைகளை சாக்கடையில் போடாமல் சேகரித்து ஒரு பையில் மொத்தமாக போட்டு தூய்மை பணியாளரிடம் கொடுப்போம். இயற்கையை பாதுகாப்போம். இன்புற்றிருப்போம்.

இதையும் படியுங்கள்:
உண்மையான பசுமை பட்டாசு எது? எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
பசுமை பட்டாசுகள் - Green Crackers