Gwada-Negative Blood Group
Gwada-Negative

உலகின் மிக அரிய ரத்த வகை கண்டுபிடிப்பு: 'குவாடா-நெகட்டிவ்'

Published on

நம்மில் பலருக்கு ரத்த வகைகள் பற்றி தெரிஞ்சிருக்கும் – A, B, AB, O, இதோட Rh-பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ். இவை நம்ம ரத்த சிவப்பணுக்களோட மேற்பரப்பில் இருக்கும் புரதங்களையும் சர்க்கரை மூலக்கூறுகளையும் பொறுத்து வகைப்படுத்தப்படும். இந்த வகைகள் ரத்த மாற்று (blood transfusion) செய்யும்போது பொருத்தமா இருப்பது முக்கியம். ஆனா, இதையெல்லாம் தாண்டி, இந்தக் கிரகத்திலேயே ஒரு சிறப்பான, மிக அரிய ரத்த வகை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

கான்வர்சேஷன் அப்டிங்கிற தளத்தில், Martin L. Olsson மற்றும் Jill Storry ஆகிய விஞ்ஞானிகள் ஒரு அசத்தலான கண்டுபிடிப்பைப் பத்தி சொல்றாங்க. கரீபியன் தீவான குவாடலூப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வழக்கமான ரத்தப் பரிசோதனை, உலகின் மிக அரிய ரத்த வகையான “குவாடா-நெகட்டிவ்”ஐ கண்டறிய வழிவகுத்திருக்கு. இந்தப் பெண்ணின் ரத்தம் அவ்வளவு தனித்துவமானது, இதுக்கு பொருத்தமான ஒரு ரத்த தானமும் கிடைக்கல. அவங்க உடன்பிறந்தவங்க ரத்தம் உட்பட! இது உலகில் 48-வது அங்கீகரிக்கப்பட்ட ரத்த வகையாம்.

குவாடா-நெகட்டிவ் எப்படி கண்டறியப்பட்டது?

நம்ம ரத்த வகைகள், சிவப்பணுக்களோட மேற்பரப்பில் இருக்கும் ஆன்டிஜென்கள் (antigens)னு சொல்லப்படுற புரதங்கள் அல்லது சர்க்கரைகளை வச்சு தீர்மானிக்கப்படுது. இந்த ஆன்டிஜென்கள் ரத்த மாற்றத்துக்கு முக்கியம், ஏன்னா இவை பொருந்தலன்னா, உடம்பு அந்த ரத்தத்தை நிராகரிச்சிடும். குவாடலூப்பைச் சேர்ந்த இந்தப் பெண்ணோட ரத்தம், எந்த தான ரத்தத்தோடயும் பொருந்தல. இதை ஆராய, பிரெஞ்சு விஞ்ஞானிகள் முழு எக்ஸோம் வரிசைமுறை (whole exome sequencing)னு ஒரு மேம்பட்ட மரபணு ஆய்வு முறையைப் பயன்படுத்தினாங்க.

இதுல, PIGZனு ஒரு மரபணுவில் ஒரு மாற்றம் (mutation) இருக்குனு கண்டுபிடிச்சாங்க. இந்த மரபணு, ரத்த சிவப்பணுக்களோட மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட சர்க்கரையைச் சேர்க்குற என்சைமை உருவாக்குது. இந்த சர்க்கரை இல்லாததால, ஒரு புது ஆன்டிஜென் உருவாச்சு. இதனால உருவானதுதான் குவாடா-பாசிட்டிவ் (ஆன்டிஜென் இருக்குறவங்க) மற்றும் குவாடா-நெகட்டிவ் (ஆன்டிஜென் இல்லாதவங்க)னு புது ரத்த வகை.

இந்தப் பெண், உலகின் ஒரே குவாடா- நெகட்டிவ் நபராக இருக்கார். மற்ற அனைவரோட ரத்தமும் குவாடா-பாசிட்டிவ் ஆக இருக்கு. இதை உறுதி செய்ய, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் மூலம் இந்த மாற்றத்தை மீண்டும் உருவாக்கி ஆய்வு செய்தாங்க.

மருத்துவ முக்கியத்துவம்

இந்தப் பெண்ணுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு இருக்கு; மேலும் அவர் இரண்டு குழந்தைகளை பிரசவத்தின் போது இழந்திருக்கார். இவை PIGZ மரபணு மாற்றத்தோட தொடர்புடையதாக இருக்கலாம். PIGZ மரபணு, GPI (glycosylphosphatidylinositol)னு ஒரு சிக்கலான மூலக்கூறை உருவாக்குவதற்கு முக்கியமானது. இந்த மூலக்கூறு உருவாக்கத்தில் குறைபாடு இருந்தா, மூளை வளர்ச்சி குறைபாடு, வலிப்பு, இறப்பு, பிறப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

இதையும் படியுங்கள்:
மூளையோட சூப்பர் செக்யூரிட்டி சிஸ்டம் -Blood Brain Barrier எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போமா?
Gwada-Negative Blood Group

மருத்துவ சவால்கள்

குவாடா-நெகட்டிவ் ரத்த வகையோட அரிதான தன்மை, மருத்துவ சவால்களை உருவாக்குது. இந்தப் பெண்ணுக்கு பொருத்தமற்ற ரத்தம் ஏற்றினா என்ன ஆகும்னு தெளிவா தெரியல. இதே ரத்த வகை உள்ள மற்றவர்களைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

இதுக்கு தீர்வாக, விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களிலிருந்து குவாடா-நெகட்டிவ் ரத்த சிவப்பணுக்களை ஆய்வகத்தில் உருவாக்குற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்காங்க. இது எதிர்காலத்தில் அரிய ரத்த வகைகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம்.

ரத்த வகைகளின் பரிணாமம்

ரத்த வகைகள், தொற்று நோய்களுக்கு எதிரா பாதுகாப்பு அளிக்குற மாதிரி பரிணாம வளர்ச்சியடைஞ்சவை. பல பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் ரத்த வகை மூலக்கூறுகளைப் பயன்படுத்தி செல்களுக்குள் நுழையுது. இதனால, உங்க ரத்த வகை உங்களை சில நோய்களுக்கு ஆளாக்கலாம்.

குவாடாவின் பெயர்

“குவாடா” குவாடலூப் தீவோட உள்ளூர் புனைப்பெயர். இந்தப் புது ரத்த வகை, குவாடலூப்போட கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்குது. இது சர்வதேச ரத்த மாற்று சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 48-வது ரத்த வகை அமைப்பு.

இதையும் படியுங்கள்:
மரபணு பொறியியல்: நம்மை மாற்றும் அறிவியல்!
Gwada-Negative Blood Group

எதிர்காலம்

மேம்பட்ட மரபணு வரிசைமுறை தொழில்நுட்பங்கள் மூலம், இன்னும் பல அரிய ரத்த வகைகள் கண்டறியப்படலாம். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனித மரபணு வேறுபாடுகளைப் புரிஞ்சுக்க உதவுது, ரத்த மாற்று மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்துக்கு புது வழிகளைத் திறக்குது.

logo
Kalki Online
kalkionline.com