சுமார் 3 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாசாவின் விண்கலத்தில் உள்ள பூனையின் HD காணொளியை பூமிக்கு அனுப்பி சாதித்துக் காட்டியுள்ளது NASA.
உலகிலேயே பிரபலமான அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா, சமீபத்தில் பூமியில் இருந்து 19 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள விண்கலத்திலிருந்த பூனையின் காணொளியை, பூமிக்கு அனுப்ப லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாகக் கூறியது. அந்த காணொளியில் பூனை ஒன்று லேசர் ஒளியை துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது.
அந்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாசா, விண்வெளியிலிருந்து லேசர் தொழில்நுட்பம் மூலமாக Ultra HD காணொளியை நாங்கள் பதிவிட்டுள்ளோம். இந்த காணொளியானது பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட Taters என்று பூனையினுடையது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணிக்காக சோதனை மேற்கொள்ள பூனையை நாங்கள் அனுப்பியுள்ளோம்.
3 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள விண்கலத்திலிருந்து பூனையின் காணொளியை பூமிக்கு அனுப்ப, மார்ஸ் மற்றும் ஜூப்பிட்டருக்கு இடையே உள்ள சிறுகோளில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளிலுள்ள, லேசர் ட்ரான்ஸீவரைப் பயன்படுத்தியுள்ளது நாசா. இந்த காணொளி பூமியிலிருந்து சந்திரனுக்கு இருக்கும் தூரத்தை விட, 80 மடங்கு தொலைவில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Flight Laser Transceiver எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 267 MBPS வேகத்தில் இந்த காணொளி பூமியை வந்தடைய 101 வினாடிகள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த முயற்சியால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில், தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக மிகப் பெரும் சாதனையை செய்து காட்டியுள்ளது நாசா.
நாசாவின் இந்த முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகிறது. இதன் மூலமாக எதிர்காலத்தில் விண்வெளி பயணங்களின்போது தகவல் பரிமாற்றம் மேம்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.