வருகை தர காத்திருக்கும் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் இதோ!

Electric vehicles
Electric vehicles

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப உதவி இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது என்றே சொல்லலாம். அவ்வகையில் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியாக உருவெடுத்துள்ள மின்சார வாகனங்களின் வருகை குறித்து ஆராய்கிறது இந்தப் பதிவு.

மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதில் புதுப்புது அம்சங்களை மின்சார வாகன நிறுவனங்கள் கொண்டு வருகின்றன. அதற்கேற்ப பொதுமக்களும் பெட்ரோல் செலவைக் குறைக்க மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர். மின்சார வாகன உலகில் அடுத்ததாக அவதாரம் எடுக்கவுள்ள சில பைக்குகளைக் காண்போம்.

1. ஹோண்டா பிசிஎக்ஸ் எலக்ட்ரிக் (Honda PCX Electric):

Honda PCX Electric
Honda PCX Electric

விரைவாக சார்ஜ் ஏற்றும் திறனையும், நவீன பேட்டரி மேனேஜ்மென்டையும் கொண்டுள்ள இந்த பைக் சுத்தமான மின்சார வாகனங்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. தினந்தோறும் பயணிக்கும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

2. டிவிஎஸ் க்ரியான் (TVS Creon):

TVS Creon
TVS Creon

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார வாகனம், பயனாளர்களின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிகமான வேகத் திறனும், மேம்பட்ட பேட்டரிகளும் வாடிக்கையாளர்களை கவரும். நவீன மின்சார வாகனமான இதன் வடிவமைப்பும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கிறது.

3. எல்எம்எல் ஸ்டார் (LML Star):

LML Star
LML Star

அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த மின்சார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு தொலைதூர பயணங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

4. சுசுகி பர்க்மேன் எலக்ட்ரிக் (Suzuki Burgman Electric):

Suzuki Burgman Electric
Suzuki Burgman Electric

வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பைக், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், அதிக மைலேஜை கொடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திடீரென உலகில் தொழில்நுட்பம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 
Electric vehicles

5. பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04):

BMW CE 04
BMW CE 04

இந்த பைக்கில் அதிக செயல்திறன் மற்றும் மிகவும் துல்லியமான கட்டுப்பாட்டைக் கொடுக்கும் மேம்பட்ட அளவிலான லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 120 கி.மீ. வரை பயணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

6. யமஹா நியோ (Yamaha Neo):

Yamaha Neo
Yamaha Neo

பெட்ரோல் வாகனகனங்களில் யமஹா மாடல் என்றாலே இன்ஜின் தரமாக இருக்கும். அதேபோல் மின்சார வாகனங்களிலும் இதன் தரம் நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பைக், அதிக மைலேஜை தரக் கூடியது.

மேற்கண்ட புதிய மாடல்கள் தவிர்த்து ஹீரோ, பஜாஜ், ஏதெர், ஓலா மற்றும் ரிவோல்ட் போன்ற நிறுவனங்களும் தங்களின் புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் இவற்றின் விலை ரூ.1 இலட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உண்மையான விலை நிலவரம் இனிமேல் தான் தெரிய வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com