புதிதாய் அறிமுகமான DION மின்சார வாகனங்களின் சிறப்பம்சங்கள் இதோ!

Electric Bikes
Electric Bikes
Published on

சுற்றுச்சூழலைக் காக்கவும், பெட்ரோல் செலவை குறைக்கவும் மின்சார வாகனங்கள் உதவுகின்றன. அவ்வப்போது புதுப்புது மாடல்களில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் டியான் நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. இவற்றின் சிறப்பம்சங்களை இப்போது காண்போம்.

மின்சார வாகனங்கள் அறிமுகமான சமயத்தில், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கினர். இருப்பினும், சில இடங்களில் மின்சார வாகனங்கள் தானாகவே தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கடந்த சில மாதங்களாகத் தான் மின்சார வாகனங்கள் பற்றிய எதிர்மறை செய்திகள் வெளியாகாமல் இருக்கின்றன. இந்நிலையில், மின்சார நிறுவனங்கள் அவ்வப்போது புதிய மாடல்களில் சில மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருப்பது இதன் சிறப்பம்சமாக இருந்தாலும், பெட்ரோல் செலவைக் குறைக்கவே பலரும் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பினார்கள்.

தற்போது பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான, டியான் (DION) மின்சார வாகன நிறுவனம் இரண்டு புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி அஸ்டா எப்எச் (Asta FH) மற்றும் அகஸ்டா எஸ்பி (Augusta SP) ஆகிய இரண்டு வாகனங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. வாகனத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்று என்பதால், இந்த ஸ்கூட்டர்களின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அஸ்டா எப்எச் (Asta FH) :

டியான் அஸ்டா எப்எச் மின்சார வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால், 110 கி.மீ தூரம் வரைச் செல்லலாம். இந்த வாகனத்தில் பிரேக்கிங் சிஸ்டம் மேம்பட்ட வசதியுடன் இருப்பதால், பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். 3,000 வாட் மோட்டாருடன், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 3.2KW பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகஸ்டா எஸ்பி (Augusta SP) :

டியான் அகஸ்டா எஸ்பி மின்சார வாகனம், 7.5 கிலோவாட் பீக் பிஎம்எஸ்எம் ஹப் மோட்டாருடன் கூடிய உயர் செயல்திறனைக் கொண்டுள்ளது. இதில் மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால், மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4.3 kw லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரண்ட் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் வசதியின் மூலமாக பாதுகாப்பு மற்றும் சவுகரியமான வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சந்தையில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,79,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மின்சார வாகனங்களின் எழுச்சி!
Electric Bikes

தள்ளுபடி:

டியான் நிறுவனத்தின் இந்த இரண்டு மின்சார வாகனங்களிலும் இருக்கும் பேட்டரிக்கு 5 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த வாகனங்களை வாங்குவதற்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி வரை அகஸ்டா எஸ்பி மற்றும் அஸ்டா எப்எச் ஆகிய மின்சார வாகனங்களுக்கு அதன் அசல் விலையில் ரூ.22,000 தள்ளுபடி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com