பேட்டரி கண்டுபிக்கப்பட்ட வரலாறு!

 Battery
Battery
Published on

பேட்டரி அதாவது மின்கலம் இன்று நவீன வடிவம் பெற்று விட்டது. பலவிதமான வடிவங்களில் மின்கலங்கள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மின்கலங்கள் மோட்டார் வண்டிகள், வீடுகள், நிறுவனங்கள் என பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் வாகனங்கள் மின்கலத்தின் மூலமாக இயங்கித் தொடங்கிவிட்டன. ஸ்கூட்டர், கார், பேருந்து என பலதரப்பட்ட வாகனங்கள் பேட்டரியில் இயங்கத் தொடங்கி ஒரு பெரும் புரட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய பயனுள்ள மின்கலம் அதாவது பேட்டரி கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தாலி நாட்டில் உள்ள பொலோனா என்ற நகரத்தில் மோன்டினா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கி.பி.1780 ஆம் ஆண்டில் லுகி கால்வானி என்னும் அறிவியல் பேராசிரியர் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த ஆய்வுக் கூடத்தில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்வதே அவருடைய பணியாக இருந்து வந்தது.

ஒரு நாள் லுகி கால்வானி தன்னுடைய ஆய்வகத்தில் மாணவர்களுக்கு தசைநார் பிணைப்பு என்ற தலைப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு பாடத்தை எளிதில் புரியவைக்க ஒரு செய்முறையை செய்து காட்டத் தயாரானார். ஓர் தாமிரத் தகட்டின் மீது தவளையின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னங்கால்களை வைத்திருந்தார். கரும்பலகையில் வரைபடத்தை வரைத்து ஒரு அறுவைக் கத்தியினை கையில் வைத்து விவரித்துக் கொண்டிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடத்தை நடத்திக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக அவர் கையிலிருந்து கத்தியின் முனையானது தாமிரத்தகட்டின் மீது வைக்கப்பட்டிருந்த தவளையின் காலின் மீது பட்டது. அப்போது தவளையின் காலானது துடித்தது. இதை கவனித்த பேராசிரியர் கால்வானி மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். மீண்டும் தன் கையில் இருந்த கத்தியின் முனையினை தவளையின் காலில் வைக்க தவளையின் அந்தக் கால் மீண்டும் துடித்தது.

இதையும் படியுங்கள்:
உப்பில் இயங்கும் பேட்டரி கார்கள்!
 Battery

ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார். அவருக்கு இதற்கான விடை உடனே கிடைக்கவில்லை. பேராசிரியர் கால்வானி இதுகுறித்து தீவிரமாக சிந்தித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆராய்ச்சிகளின் மூலம் இதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார். எனவே தாமிரத்தகட்டிற்கு பதிலாக கண்ணாடித் தகடு ஒன்றை வைத்து ஆராய்ந்து பார்த்தார். அப்போது தவளையின் காலில் துடிப்பு ஏற்படவில்லை. பின்னர் மரப்பலகை ஒன்றை வைத்து ஆராய்ந்தார். அப்போதும் துடிப்பு ஏற்படவில்லை. தவளையின் கால்களை தாமிரத்தகட்டில் வைத்து கண்ணாடிக் குச்சியால் தொட்டுப் பார்த்தார். அப்போதும் துடிப்பு ஏற்படவில்லை. நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக அவர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். தசைநார்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரமானது உலோகத்தைக் கொண்டு தூண்டப்படும் போது அதிர்விற்கு உள்ளாகிறது. இதன் காரணமாகவே தவளையின் கால்கள் துடிக்கின்றன. ஈரப்பசையுடைய தவளையின் கால்களை இரண்டு வெவ்வேறு வகையான உலோகங்களினால் தூண்டப்படும் போது மின்அதிர்வு உண்டாகிறது என்ற உண்மை அவர் கண்டுபிடித்தார். கால்வானியின் இந்த கண்டுபிடிப்பு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது குறித்து பலர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
சார்ஜ் போடாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி.. சீனாக்காரன் பலே கில்லாடி தான் பா! 
 Battery

இத்தாலியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அலெக்சாண்டிரோ வோல்டா. அவர் தனது ஆராய்ச்சியின் பயனாக ஒரு உபகரணத்தை உருவாக்கினார். தாமிரத் தகடு மற்றும் துத்தநாகத் தகடுகளிலிருந்து வட்டவடிவ நாணயம் போன்ற தகடுகளை உருவாக்கினார். பின்னர் மை உறிஞ்சும் தாள்களை வட்டவடிவதில் வெட்டி அதை உப்புத் தண்ணீரில் ஊற வைத்தார். பின்னர் ஓரு துத்தநாக நாணயத்தையும் தாமிர நாணயத்தையும் ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கினார். இடையிடையே உப்புக்கரைசலில் ஊறவைத்த மை உறிஞ்சும் தாள்களை அடுக்கினார். கடைசியில் கீழ்ப்புறம் இருந்த துத்தநாக நாணத்தையும் மேற்புறம் இருந்த தாமிர நாணயத்தையும் ஒரு செப்புக்கம்பியால் இணைத்தபோது மின்னோட்டம் ஏற்பட்டதை உணர்ந்தார். இவர் பின்னர் உப்புக்கரைலுக்கு பதிலாக அமிலக்கரைசலை பயன்படுத்தினால் அதன் மூலமாக மின்னோட்டத்தின் வலிமை அதிகமாகிறது என்ற உண்மையினையும் கண்டுபிடித்தார். தொடர்ந்த உழைப்பின் பயனாக கி.பி.1801 ஆம் ஆண்டில் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி ஓர் உபகரணத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். இந்த உபகரணத்திற்கு மின்கலம் அதாவது பேட்டரி என்று பெயரிட்டார். இந்த கண்டுபிடிப்பே பின்னர் பலவகையான நவீன மின்கலங்களைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com