De-aging தொழில்நுட்பத்தின் வரலாறு!

De-aging Technology
History of De-aging Technology!
Published on

திரைப்படத் துறையில் காலம் காலமாக கதாபாத்திரங்களின் வயதைத் குறைத்து அவர்களை இளமையாக திரையில் காட்டும் முயற்சிகள் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் மேக்கப் கலைஞர்களின் கைவண்ணத்தில் நடிகர்களின் தோற்றத்தை மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததால் திரைப்படத்துறையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்த தொழில்நுட்பம், அன்று முதல் இன்று வரை எப்படி மாறியுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

டீ-ஏஜிங் தொழ்நுட்பத்தின் அடிப்படைகள் கணினி கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் துறைகள் சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற காலத்திலேயே உருவாக்கத் தொடங்கிவிட்டன. ஆரம்ப காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கடினமானதாகவும், நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒன்றாகவும் இருந்தது. ஆனால், அதிக செயல்திறன் கொண்ட கணினிகள் அதிகரித்ததும், மென்பொருள் தொழில்நுட்பம் வளர்ந்ததும், இந்தத் தொழில்நுட்பத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியது. 

  • ஆரம்ப காலத்தில் நடிகர்களை இளமையாக காட்டுவதற்கு மேக்கப் கலைஞர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சில சமயங்களில், உண்மையான கதாபாத்திரங்களுக்கு பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தினர். 

  • பின்னர், ஆரம்ப கால கணினி கிராபிக்ஸ் மூலம் 2D அனிமேஷன் மூலமாக கதாபாத்திரங்களை இளமையாகக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.‌

  • அதற்கு அடுத்தபடியாக 3டி மாடலிங் தொழில்நுட்பம் வளர்ந்ததால், நடிகர்களின் முகங்களை 3டி பாடல்களாக மாற்றி அவற்றை இளமையாக மாற்றி திரையில் காட்டினார்கள். 

  • அடுத்த கட்டமாக, முகபாவங்களை சேகரித்து அதன் மூலமாக இளமையாகக் காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்ததால், நடிகர்களின் முக அமைப்பை துல்லியமாக பகுப்பாய்வு செய்து, வயது தொடர்பான மாற்றங்களை எளிதாக செய்ய முடிந்தது. 

  • இப்போது மெஷின் லேர்னிங் மற்றும் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான டேட்டாக்களை பகுப்பாய்வு செய்து, மிகவும் துல்லியமான டீ-எஜிங் முடிவுகளைப் பெற முடிகிறது. சமீபத்தில் வெளியான GOAT திரைப்படத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் விஜயை இளமையாகக் காட்டினார்கள். 

டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தின் தாக்கம்: 

இந்த தொழில்நுட்பத்தால் கதைகளை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் வகையில் விரிவாக மாற்றி அமைக்கலாம். இதன் மூலமாக நடிகர்கள் தங்கள் இளமை காலத்திலிருந்த தோற்றத்தை திரையில் தத்ரூபமாக மீண்டும் கொண்டுவர முடியும். இது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய வகையான திரைப்பட அனுபவத்தை வழங்கும். 

இதையும் படியுங்கள்:
இளமை பொங்கும் கொலாஜன் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் வழிகள்!
De-aging Technology

இந்தத் தொழில்நுட்பத்தின் சவால்கள் என்று பார்க்கும்போது, இவ்வாறு ஒருவரை இளமையாக மாற்றும் செயல்முறை மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். இதில் சில குறைபாடுகள் இருப்பதால், இளமையாக மாற்றப்பட்ட உருவம் செயற்கையானது என்பது தெரிந்துவிடும். மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த பல்வேறு நெறிமுறைகள் கேள்வி எழுப்பப்படுகின்றன. ஏனெனில் இதைப் பயன்படுத்தி, ஒருவரை தவறாக சித்தரிக்க முடியும் என்பதால், இதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. 

டீ-ஏஜிங் தொழில்நுட்பம் திரைப்படத்துறையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால் எதிர்காலத்தில் இது மேலும் மேம்பட்டு திரைப்படங்கள் இன்னும் எதார்த்தமானதாக மாறும். இருப்பினும் இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள சவால்கள், இதன் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com