அட்டகாசமான புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகும் ‘ஹோண்டா ஷைன் 100 DX’

ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஹோண்டா ஷைன் 100 DX பைக்கில் உள்ள அம்சங்கள் உங்கள் பார்வைக்கு...
Honda Shine 100 DX
Honda Shine 100 DX img credit- bikewale.com
Published on

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான ஹோண்டா, உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் மற்றும் கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். மக்களிடையே தரமான தயாரிப்புகளுக்காக அறியப்படும் ஹோண்டா நிறுவனம் தனது புதிய Shine 100 DX மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஹோண்டா ஷைன் 100 ஐ அடிப்படையாகக் கொண்டு, ஷைன் 100 DX அதிரடி மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட மேம்பட்ட பதிப்பாகும். இந்த பைக்கின் விலை குறித்த விவரங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி வாக்கில் வெளியிடப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் தினசரி சேவை பூர்த்தி செய்யும் வகையில் ஹோண்டா ஷைன் 100 DX-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பைக், ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாடல் பைக்குகளுக்கு சவால் விடும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஷைன் 100 DX பைக்கில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட அகலமான பெட்ரோல் டேங்க் மற்றும் புதிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , போல்ட் கிராபிக்ஸ், க்ரோம் டிடெயில்கள் ஆகியவை இதில் உள்ளன.

மேலும், இது சாதாரண பயணத்திற்கேற்ற வகையில் உயர்ந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. பேர்ல் இக்னியஸ் பிளாக் (Pearl Ingenous Black), இம்பீரியல் ரெட் மெட்டாலிக் (Imperial Red Metallic), அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் (Athletic Blue Metallic) மற்றும் ஜெனி கிரே மெட்டாலிக் (Geny Gray Metallic). ஹோண்டா ஷைன் 100 DX முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வழங்குகிறது. இது 1.9 மீட்டர் டர்னிங் ரேடியஸையும் கொண்டுள்ளது.

இந்த பைக் பின்புறத்தில் டெலஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை- ஷாக் அப்சார்பர்களுடன் வருகிறது. மேலும், இதில் டிரம் பிரேக்குகள் டியூப்லெஸ் டயர்கள், 17 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. மேலும் செல்ஃப் மற்றும் கிக்-ஸ்டார்ட் ஆகிய இரண்டு வசதிகளையும் வழங்குகிறது.

இந்த பைக்கில் 98.98 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 7,500 ஆர்பிஎம்மில் 7.28 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.04 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் நான்கு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பெடல் ஷிப்டர்களுடன் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் எடிஷன்
Honda Shine 100 DX

ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஹோண்டா ஷைன் 100 DX பொருத்தமான பல்வேறு புதிய வடிவமைப்புடன், வாடிக்கையாளர்களின் தினசரி பயணத்திற்கு அதிக வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com