ADAS பற்றி தெரியுமா?

ADAS technology
ADAS technologyImg Credit: Uffizio

இன்றைய நவீன உலகில் ADAS என்பது எல்லா கார் தயாரிக்கும் நிறுவனங்களும் உபயோகிக்கும் டெக்னாலஜியாக உள்ளது. அப்படி என்ன சுவாரசியம் இதில் உள்ளது என்பதை காண்போம்.

ADAS தொழில்நுட்பம்:

ADAS என்பது ‘Advanced Driver Assistance System.’ மனிதன் கார் ஓட்டும்போது தன்னை அறியாமல் கவனம் சிதறும் சமயத்தில் இந்தத் தொழில்நுட்பம் தக்க சமயத்தில் உதவும். அதாவது steeringல் இருந்து கையெடுத்தாலோ, முன்னால், பின்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களைக் கணிக்க மறந்தாலோ, அரசால் சொல்லப்பட்டுள்ள வேக அளவை மீறினாலோ நமக்கு எச்சரிக்கை மற்றும் தேவைப்பட்டால் Braking கூட செய்யும் தொழில்நுட்ப வசதி இதில் உள்ளது. இப்படி எல்லாவற்றையும் எப்படி செய்கிறது என்பதை காண்போம்.

முழு சென்சார் ஜாலம்:

இப்போது நாம் பயன்படுத்தும் எல்லா வகையான மின் சாதனங்களில் இந்த சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சென்சாரில் ஒரு கண்டிஷன் program செய்யப்பட்டிருக்கும். நிஜ உலகில் இந்த கண்டிஷன் மாறுபடும்போது ஒரு வகையான சிக்னல் அனுப்பி அலர்ட் செய்ய அந்த சென்சார் உதவும். இப்படி ADAS தொழில்நுட்பம் பயன்படுத்தும் கார்களில் பல வகையான சென்சார்கள் மற்றும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து அலர்ட், Braking போன்ற விஷயங்கள் நடக்கின்றன. இப்படி இந்த ADAS level 1 to 6 என கார்களின் தரத்திற்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது.

Adaptive cruise control:

பொதுவாக cruise என்பது எல்லா கார்களில் வரும் தொழில்நுட்பம். அதனுடைய பயன் நாம் செட் செய்யும் வேகத்தில் வாகனத்தைச் செலுத்துவதுதான். ஆனால், brake செய்தால் அந்த வேகம் குறைந்துவிடும். ஆனால், இந்த ‘Adaptive cruise control’ இல் நாம் ஒரு வேகத்தை செட் செய்தால் அது மாறவே மாறாது. நீங்கள் கேட்கலாம் ‘முன்னால் வண்டி சென்றால் என்ன ஆகும் என்று?’ அந்தச் சமயத்தில் தானாகவே வேகத்தைக் குறைத்து, பின் அதுவாகவே செட் செய்த வேகத்திற்கு வந்துவிடும். பொதுவாக இந்த ‘Adaptive cruise control’ தானியங்கி கார்களில் ‘Automatic Transmission’தான் பயன்படுத்த இயலும்.

Lane departure warning:

நாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவே வெள்ளைக் கோடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் அவசியமே அந்த கோட்டிற்குள் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதுதான். ஏதோ ஒரு கவனக்குறைவால் அந்தக் கோட்டை தாண்டினாலோ இந்த ADAS தொழில்நுட்பம் அலர்ட் செய்துவிடும் அல்லது, steeringகை அதுவாகவே கண்ட்ரோல் செய்து கோட்டிற்குள் வாகனத்தைக் கொண்டுவரும்.

இதையும் படியுங்கள்:
Drug-GPT: மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI கருவி! மருத்துவத்துறையில் ஒரு புரட்சி!
ADAS technology

Front and Rear collision warning:

முன்னால் போகும் வாகனம் நின்றாலோ இல்லை ஓட்டுனர் அதை கவனிக்க மறந்தாலோ, பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க மறந்தாலோ இந்த ADAS தொழில்நுட்பம் அலர்ட் அல்லது braking செய்யும். மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களைப் பார்க்காமல் indicator போட்டு திருப்ப முயற்சி செய்தாலோ அலர்ட் இண்டிகேஷன் கொடுக்கப்படும்.

வேக கட்டுப்பாடு சிக்னல்:

நெடுஞ்சாலையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில அபாய பேனர்களை நாம் பார்க்காவிட்டாலும் நம் கார்களில் உள்ள கேமரா அதை படம் பிடித்து நமக்கு அலர்ட் செய்யும். மற்றும் ஓட்டுனரின் கவனம், சோர்வு ஆகியவற்றை sense செய்து அலர்ட் கொடுத்து வாகனத்தை நிறுத்த வைக்கும்.

சாமானியன் கைகளில்:

ஒரு காலத்தில் பிரீமியம் கார்களில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இப்போது எல்லா ரக கார்களிலும் வெவ்வேறு லெவல்களில் வந்துள்ளது. ஆகையால் அனைத்து மக்களும் இந்தப் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இயலும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com