Google Maps பயண நேரத்தை துல்லியமாக எவ்வாறு கணக்கிடுகிறது?

Google maps
Google maps
Published on

நாம் அனைவரும் Google Maps-ஐ நம்பி இதற்குமுன் அனுபவமில்லாத இடத்திற்குச் செல்கிறோம். அதில் 15 நிமிடங்கள் என்று காட்டினால், ஏறக்குறைய அதே நேரத்தில் நாம் சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுகிறோம். இந்த துல்லியமான நேரக் கணிப்பு எப்படி சாத்தியமாகிறது?

Google Maps நான்கு முக்கிய அடுக்குகளில் இருந்து தரவுகளைப் பயன்படுத்துகிறது:

1. வரைபடத் தரவு (Mapping data) மற்றும் வேக வரம்புகள்:

முதலில், நீங்கள் செல்ல வேண்டிய தூரத்தை துல்லியமாகக் கணக்கிடுகிறது. சாலையின் வகை (நெடுஞ்சாலை, உள்ளூர் சாலை) மற்றும் அந்தப் பகுதியில் உள்ள அதிகாரபூர்வ வேக வரம்புகளை (speed limits) நேரக் கணிப்பைச் செய்கிறது.

2. வரலாற்றுப் போக்குவரத்துத் தரவு:

ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து எப்படி இருக்கும் என்று Google Maps-க்குத் தெரியும். கடந்த பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பயணத் தரவுகளை ஆய்வு செய்து, அந்த நேரத்தில் வழக்கமான சராசரி வேகம் கணிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செயற்கை கோள்களை ஏன் கடல் பகுதியில் விழும்படி செய்கிறார்கள்?
Google maps

3. நிகழ்நேரப் போக்குவரத்துத் தரவு:

இங்கேதான் அதன் மிகப்பெரிய பலமே உள்ளது. Google Maps பயன்படுத்தும் கோடிக்கணக்கான Android மற்றும் iPhone பயனர்களின் இருப்பிடத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. பயணிகள் சாலைகளில் எவ்வளவு வேகமாகச் செல்கிறார்கள் என்பதைச் சேகரித்து, அந்தத் தகவலை உடனடியாகச் செயலாக்குகிறது. ஒரு பகுதியில் பல வாகனங்கள் மெதுவாகச் சென்றால், அங்கே போக்குவரத்து நெரிசல் இருப்பதாக புரிந்துகொண்டு, பயண நேரத்தை உடனடியாகச் சரிசெய்கிறது. விபத்துகள், சாலைப் பணிகள் போன்றவற்றை பயனர்கள் நேரடியாகப் புகாரளிக்கும்தரவுகளையும் இது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

4. செயற்கை நுண்ணறிவு:

Google Maps அதன் நேரக் கணிப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. வரலாற்றுத் தரவு மற்றும் நிகழ்நேரத் தரவு இரண்டையும் இணைத்து, அடுத்த 10, 20 அல்லது 50 நிமிடங்களில் போக்குவரத்து எப்படி மாறும் என்பதை AI கணிக்கிறது. ஒரு விபத்து நடந்தால், அது எத்தனை நேரம் நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க இந்த AI மாதிரிகள் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
Lava-வின் அடுத்த மாஸ்டர் பீஸ்! Agni 4-ல் உள்ள இந்த ஒரு அம்சம் போதும்!
Google maps

நெருக்கடி ஏற்படும் என்பதால் ஒரு வழிக்கு பதிலாக, குறைந்த போக்குவரத்து உள்ள, வேகமான மாற்று வழித்தடத்தை உடனடியாகப் பரிந்துரைக்கிறது .டைஜ்க்ஸ்ட்ரா அல்காரிதம் (Dijkstra's Algorithm) போன்ற அதிநவீன வழிகாட்டி அல்காரிதம்களை இது பயன்படுத்துகிறது.

Google Maps என்பது தொடர்ந்து கற்றுக்கொண்டு, புதிய தகவல்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு டைனமிக் அமைப்பு. அதனால்தான் அந்த பயண நேரக் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாக உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com