ஆற்றுக்கு நடுவே பாலம் கட்டுவது எப்படி? அறியப்படாத பொறியியல் ரகசியங்கள்!

ஆக்ரோஷமான ஆற்று நீரை கட்டுப்படுத்தி பிரம்மாண்டமான தூண்களை எழுப்பும் நவீன தொழில்நுட்பத்தின் பின்னணி இதோ!
பாலம் கட்டுவது - River Bridge Construction
பாலம் கட்டுவது - River Bridge ConstructionAI Image
Updated on

ற்றுப் பாலங்களின் அஸ்திவாரத்தில் காஃபர்டேம், கெய்சான் போன்ற நீர்ப்புகா அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்டீல் ஷீட் பைல்கள் கொண்டு தடுப்புச் சுவர் எழுப்பி தண்ணீரை வெளியேற்றிய பின், தொழிலாளர்கள் உலர்ந்த பகுதியில் இறங்கி மண், கற்களை அகற்றி, இரும்புக் குழாய்கள், கான்கிரீட் மூலம் தூண்கள் அமைக்கின்றனர்.

நியூமேடிக் கெய்சான்களில் அழுத்தப்பட்ட காற்று, ஏர்லாக் வழியாக வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கிறது. இத்தகைய அபாயகரமான பணியின் மதிப்பை உணர்ந்து பாலங்களை பாதுகாப்பது நமது கடமை.

கடற்கரைக்குச் சென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மணல் வீடு கட்டி விளையாடுவார்கள். அலை வந்ததும் மணல் வீடுஅடித்துச் சென்றவிடும். ஆனால் நீர் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலும் கடலிலும் பல வருடங்கள் நிலைத்து நிற்கும் தூண்கள் கட்டப்பட்டு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அவை அமைக்கும் முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஆற்றில் பாலம் கட்டுவது எப்படி?

சிவில் இன்ஜினியரிங் துறையில் மிகவும் சவாலான வேலைகளில் ஒன்றான வேகமாக ஓடும் ஆற்றின் நடுவில் தூண்கள் அமைக்க துல்லியம், தைரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் தேவை. சிறிய தவறு கூட பல மாத உழைப்பை வீணாக்கிவிடும் என்பதால் பாலம் கட்டு முன் இன்ஜினியர்கள் முழுமையாக ஆற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்.

அந்த வகையில் நீரின் ஆழம், ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணின் உறுதி தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவற்றை அளவிட்டு பாலத்தை வடிவமைக்க எத்தனை தூண்கள் தேவை என்பதை கணக்கிடுவார்கள்.

ஆற்றுப் பாலங்களின் அஸ்திவாரம் காஃபர் டேம் (Cofferdam)

கட்டுமான பணிக்காக உலர்வான பகுதியை உருவாக்க உதவும் நீர்ப்புகா அமைப்பான காஃபர்டேம் ஆற்று பாலங்களில் அஸ்திவாரம் அமைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. காஃபர் டேம்கள் 10-20 மீட்டர் நீளமுள்ள ஸ்டீல் ஷீட்களை (Sheet Piles) கொண்டு உருவாக்கப்பட்டு, ஹைட்ராலிக் சுத்தியல் அல்லது வைப்ரேட்டர்கள் மூலம் ஆற்றுப்படுகையில் ஆழமாக ஒன்றோடு ஒன்று இணைந்து அல்லது சதுரமாக இந்த ஷீட்டுகள் பதிக்கப்பட்டு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்படும். இதனால் தண்ணீர் கட்டுமான பகுதிக்குள் வராமல் தடுக்கப்படும்.

காஃபர்டேம் அமைத்த பிறகு என்ன?

நீர்ப் புகா அமைப்பான காஃபர்டேம் அமைத்த பிறகு பெரிய பம்புகளின் உதவியுடன் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு ஆற்றுக்கே மீண்டும் திருப்பி விடப்படும். அதன் பிறகு காய்ந்து இருக்கும் அந்த இடத்தில் ஏணிகள் அல்லது கிரேன்கள் மூலம் தொழிலாளர்கள் உலர்ந்த பகுதியில் இறங்கி மண், மணல் மற்றும் கற்களை அகற்றி சுத்தப்படுத்துவார்கள். உறுதியற்ற மண் கொண்ட ஆற்றுப்படுகையில் பாலத்தின் எடையை தாங்கி அஸ்திவாரம் அமைக்க 20-25 மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய்கள் செலுத்தப்பட்டு அஸ்திவாரத்திற்காக கான்கிரீட் கொட்டப்படும்.

பாலம் கட்டுவது - River Bridge Construction
பாலம் கட்டுவது - River Bridge ConstructionAI Image

கட்டுமானம் உறுதியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்கவும் காற்றுக்குமிழ்களை நீக்கி வைப்ரேட்டர் பயன்படுத்தப்படும். முழுவதும் ஆபத்தான இந்த செயல்முறையில் காப்பர் டேமில் சிறிய கசிவு அல்லது நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் முழுவதும் சரிந்து அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

கெய்சான்' (Caisson) தொழில்நுட்பம்

மற்றொரு நீர் புகா அமைப்பான 'கெய்சான்' (Caisson) தொழில்நுட்பத்தை காஃபர்டேம் வேலைகள் முடிந்ததும் இன்ஜினியர்கள் பயன்படுத்துவார்கள். இதன்படி ஆற்று படுக்கையில் இவற்றை மூழ்கடித்து உலர்வான பகுதியை உருவாக்கி தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் படுவார்கள். மூழ்குவதற்கு உதவும் வகையில் ஓபன் கெய்சான்களின் அடிப்பகுதியில் ஒரு துவாரம் இருக்கும்,

அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தி நியூமேடிக் கெய்சான்கள், தண்ணீரை வெளியே தள்ளும். இந்த அழுத்தப்பட்ட அறைக்குள் ஏர்லாக் வழியாக தொழிலாளர்கள் நுழைந்து வேலை செய்வார்கள்.

இதையும் படியுங்கள்:
கடலுக்கு நடுவே பிரம்மாண்ட தூண்கள்! காஃபர் டேம் தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும் இரகசியங்கள்!
பாலம் கட்டுவது - River Bridge Construction

இவ்வாறு ஒவ்வொரு தூண்களும் அமைக்கப்பட்டு பாலங்கள் கட்டப்படுகின்றன. பயண தூரத்தை குறைத்து நாட்டின் மதிப்பை உயர்த்திக்காட்டும் பாலங்கள் அமைப்பதில் உள்ள நடைமுறை அபாயங்கள் குறித்து தெளிவாக காணமுடிகிறது. ஆற்றுக்கு நடுவில் உள்ள பாலங்களை இனி நாம் காணும்போது வியக்க வைக்கும் என்ஜினியரிங் தொழில்நுட்பம் நம் கண்களுக்கு முன்னால் நிழலாடும். பாலங்களை முடிந்தவரை சுத்தமாகவும் சேதப்படுத்தாமலும் வைத்திருப்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் நாம் செய்யும் நன்றியாக அமையும்.

இந்த பதிவை வாசிப்பதன் மூலம், ஆக்ரோஷமான ஆற்று நீருக்கு நடுவில் பிரம்மாண்ட பாலங்கள் எவ்வாறு கட்டப்படுகின்றன என்ற பொறியியல் அதிசயத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு, நாட்டின் உட்கட்டமைப்பு சாதனைகளை ஒரு புதிய கோணத்தில் வியந்து ரசிக்கும் அறிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com