

கடலுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது கடல் மண்ணை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்கி, இரும்பு-கான்கிரீட் குழாய்களை பெரிய அகழியில் மூழ்கடித்து, ரப்பர் முத்திரைகள் மூலம் நீர் புகாதவாறு இணைக்கும் சிக்கலான பொறியியல் செயல்முறை. ஆர்க்கிமிடீஸ் தத்துவம், சோனார் ஆய்வு, பாதுகாப்பு கணக்குகள் ஆகியவை இணைந்து கடலடியில் பாதுகாப்பான சுரங்கப் பாதையை உருவாக்குகின்றன.
கடலுக்கு அடியில் பாலம் அல்லது சுரங்கம் அமைப்பது என்பது பெரிய நீர் மூழ்கிக் குழாய் மற்றும் காஃபர் டேம் போன்ற பொறியியல் முறைகள் மூலம் சாத்தியமாகிறது.
காஃபர் டேம் (Cofferdam) என்பது ஆறு, ஏரி அல்லது கடல் போன்ற நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகள் செய்யும்போது, அந்தப் பகுதிக்குள் தண்ணீர் வராமல் தடுத்து உலர்வான சூழலை உருவாக்கப் பயன்படும் தற்காலிக அணை அல்லது தடை ஆகும்.}
சுரங்கம் அமைக்கும் முறை
முதலில் கடல் மண்ணை ஆய்வு செய்து நீரின் அழுத்தத்தை சமாளிக்கும் வகையில் இரும்பு மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள்.
கடலுக்கு அடியில் ஒரு பெரிய அகழி தோண்டப்படுகிறது. கான்கிரீட்டால் ஆன மிகப்பெரிய குழாய் துண்டுகள் தயாரிக்கப்பட்டு மிதவை கப்பல் மூலம் கடலுக்கு எடுத்து வரப்படுகின்றன. இந்த குழாய்கள் கடலில் மூழ்கடிக்கப் பட்டு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு நீர் புகாதவாறு ரப்பர் முத்திரைகள் மூலம் இறுக்கப் படுகின்றன.
இறுதியில் குழாய் முழுவதும் நீக்கப்பட்டு அதன் மேல் மணல் மற்றும் பாறைகள் நிரப்பப்பட்டு பாதுகாப்பான சுரங்கமாக மாற்றப்படுகிறது.
நவீன கடல் பாலம் உருவாக்கப் பயன்படும் ஓபன் மற்றும் குளோஸ்டு கைசன் முறைகள்:
கடலில் பாலம் கட்ட, நீருக்கு அடியில் பெரிய துளைகள் இடப்பட்டு இரும்பு தூண்கள் கடல் பகுதிக்குள் ஆழமாக செலுத்தப்படுகின்றன. தூண்கள் கட்டப்படும் பகுதியில் தண்ணீர் இல்லாதவாறு காற்று அடைக்கப்பட்ட காஃபர் டேம் எனப்படும் இரும்பு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளே இருக்கும் நீர் வெளியேற்றப்பட்டு உலர்வான பகுதி உருவாக்கப்படுகிறது. அந்த உலர்ந்த இடத்திற்குள் பணியாளர்கள் இறங்கி உறுதியான கான்கிரீட் தூண்களை கட்டுகிறார்கள்.
தூண்கள் உறுதியானதும் அதன் மீது பாலத்தின் சாலைகள் இணைக்கப்படுகின்றன ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தின் படி நீருக்கு அடியில் இருக்கும் சுரங்க குழாய்கள் எடை அது இடமாற்றம் செய்யும் நீரின் எடைக்கு சமமாக இருக்குமாறு பொறியாளர்கள் கணக்கிட்டு அமைக்கிறார்கள்.
எந்த ஒரு பெரிய கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன் கடல் மட்டத்தின் அடியில் என்னென்ன வகையான பாறைகள், மண் உள்ளது என்பதை சோனார் தொழில்நுட்பம் மூலம் அறிகின்றனர். வேகமாக ஓடும் நீரில் அஸ்திவாரம் அமைப்பது மிகவும் சிக்கலான காரியம். ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட உயிர் இழக்க நேரிடும்.
காஃபர் டேம் மூலம் தண்ணீரில் ஒரு பகுதி தற்காலிகமாக வடிக்கப்பட்டு அடித்தள பணிகளை எளிதாக்குகிறது. பொறியியல் விரிவான பணி மேற்கொள்ளப்பட்டு இதன் அடிப்படையில் பாலம் எத்தனை தூண்களைக் கொண்டிருக்க வேண்டும் எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.
10 முதல் 20 மீட்டர் நீளம் கொண்ட அவை ஹைட்ராலிக் சுத்தி மூலம் ஆற்று படுக்கையில் வைக்கப்படுகின்றன. எக்கு தாள்கள் ஒன்றின் மீது ஒன்றாக அமைக்கப்பட்டு வட்ட வடிவம் அல்லது சதுர வடிவம் சுவரை உருவாக்குகிறார்கள்.
இதன் மூலம் தண்ணீர் உள்ளே நுழைவது தடுக்கப் படுகிறது. எக்கு தாள்களின் அதிர்வு மீன்களை பயமுறுத்தும். தொழிலாளர்கள் தலைக்கவசம் மற்றும் லைப் ஜாக்கெட் கண்டிப்பாக அணிய வேண்டும். சுவர் கட்டப்பட்டதும் உள்ளே இருக்கும் தண்ணீர் பம்பு செட்டு மூலம் வெளியேற்றப்படுகிறது. தொழிலாளர்கள் ஏணிகள் கிரேன்கள் மூலம் உள்ளே சென்று வேலை செய்கிறார்கள்.
ஆற்றுப்படுகையில் 20 முதல் 50 மீட்டர் ஆழத்திற்கு நீண்ட இரும்பு குழாய்களை செருகவேண்டும். அடுத்த கட்டமாக கான்கிரீட் அமைப்பு வைக்கப்பட்டு வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது. சுவரில் கசிவு ஏற்பட்டால் கூட சிக்கலாகிவிடும். எனவே நீர்மட்டத்தை கண்காணிக்க சென்சார்கள் நிறுவப்படுகின்றன.
ஆழமற்ற நீரில் அடித்தளம் அமைக்க கைசன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கைசன் தொழில்நுட்பத்தில் மூடிய வகை திறந்த வகை என இரண்டு தொழில் நுட்பங்கள் உள்ளன.
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்
இந்தியாவில் கடல் ஆறு மேல் நீளமான பாலம் மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் லிங்க் என்ற பாலம் நவி மும்பை நகரங்களை இணைக்கிறது.
இது ஆறு வழிச்சாலையாகும் 22 கிலோமீட்டர் நீளம் கொண்டது இதில் 16 கிலோமீட்டர் கடலுக்கு மேல் அமைந்துள்ளது 6 கிலோ மீட்டர் கடலின் அடியில் அமைந்துள்ளது இதன் அகலம் 89 அடி உயரம் 82 அடி இந்த பாலத்தில் தினசரி 70 ஆயிரம் வாகனங்கள் செல்ல முடியும்.
இவை தவிர இந்தியா இலங்கை இடையே பாலம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமான கடல் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள இயற்பியல் விதிகள் மற்றும் காஃபர் டேம் முறைகளின் நுணுக்கங்களை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்ற தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.