.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
விமானங்கள் விமான நிலையங்களில் ஏறும் போது மற்றும் இறங்கும் போது அதை பார்த்து நம்மில் பலரும் ரசித்திருப்போம். ஆனால் ஆயிரக்கணக்கான எடையுடன் விமானங்கள் எப்படி பறக்கின்றன? பல பேருக்கு இந்த தொழில்நுட்பம் தெரியாது!
ஆயிரக்கணக்கான கிலோ எடையுடன் விமானங்கள் பறக்கின்றன. அவை மிகவும் கனமாக இருக்கும்போது அவை எப்படி வானத்தில் பறக்க முடியும்? நாம் ஒரு சிறிய இரும்புத்துண்டை வீசும்போது, புவியீர்ப்பு விசை அதை கீழே விழ செய்கிறது. இவ்வளவு பெரிய விமானம் ஏன் விழவில்லை? என்ற கேள்வி பலரது மனதில் எழுகிறது. இதற்கான விடை அறிவியலின் சில அடிப்படை விதிகளில் உள்ளது.
விமானம் பறப்பதற்கு முக்கிய காரணம் ஏர்ஃபாயில் தொழில்நுட்பம். விமானத்தின் இறக்கை விமானத்தை மேல் எழும்பி பறக்க உதவுகிறது.
விமானத்தின் இறக்கைகள் வடிவமைப்பு காரணமாக, அதன் மேற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாகவும், கீழ்ப்புறத்தில் குறைவாகவும் இருக்கும். இதனால், மேல் நோக்கிய விசை உருவாகி, விமானம் மேலே உயர்கிறது. இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கிறது. இறக்கை காற்றை கீழே தள்ளும் போது காற்றானது விமானத்தை மேலே பறக்க செய்கிறது. விமானம் மேலே பறக்க தொடங்கியதும் சீராகவும் நேராகவும் பறப்பதற்கு எஞ்சின் செயல்படுகிறது. நவீன விமானங்களில் 'டர்போ' எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விமானங்களை இயக்க சக்திவாய்ந்த ஜெட் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த என்ஜின்கள் வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், விமானத்தை காற்றில் நிலைநிறுத்த தேவையான உந்துதலை வழங்குகின்றன. விமானம் எவ்வளவு வேகமாக நகருகிறதோ, அவ்வளவு லிப்ட் உருவாக்கப்படுகிறது. விமானத்தின் எடை அதை கீழ்நோக்கி இழுக்க விரும்புகிறது, ஆனால் அதன் மேல்நோக்கிய தூக்கும் சக்தி, அதாவது உந்துசக்தி, இந்த எடைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், விமானம் விழாது. இந்த சமநிலை பராமரிக்கப்படும் வரை, விமானம் எளிதாக பறக்க முடியும்.
விமானத்தின் பல்வேறு பாகங்களான ஐலரான், லிஃப்ட், ரேடார் போன்றவை விமானியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தொழில்நுட்பம் வழியாக, விமானம் இடதுபுறமாக சுழலலாம், உயரத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கலாம்.
நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட விமானத்தின் உடல் காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றம் ஆகியவற்றின் எதிர்வினையை எளிதில் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காற்று கொந்தளிப்பு அல்லது காற்றோட்டத்தின்போது விமானம் அதன் சமநிலையை பராமரிக்க முடியும்.
விமான இறக்கைகள் நுனியில் மேல் நோக்கி வளைந்திருக்கும் இது அழகிற்காக அல்ல, இந்த வடிவமைப்பு, விமானம் பறக்கும் போது ஏற்படும் சுழல் காற்றை குறைக்க உதவுகிறது. இதனால் எரிபொருள் சேமிக்கப்படும். மேலும், விமானம் நிலையான முறையில் பறக்க உதவுகிறது.
விமானங்கள் பயண உயரம்(cruising altitude) அடைந்தால் தான் எளிதாக பறக்க முடியும். பயண உயரம் என்பது கடல் மட்டத்திற்கு மேலே உள்ள உயரம் ஆகும். பொதுவாக, விமானம் அதன் பெரும்பாலான நேரம் காற்றில் தான் பறக்கிறது. அதேபோல், பெரும்பாலான வணிக ஜெட் விமானங்கள் 35,000 அடி உயரத்தில் பறக்கின்றன. இந்த உயரத்தில் காற்று எளிதாக இருக்கும் அதனால் விமானங்கள் வேகமாக செல்ல முடியும். எரிபொருள் தேவையும் குறையும்.
ஒரு விமானத்தில் குறைந்த பட்சம் 5 விமான பணிப்பெண்களும், ஒரு கமாண்டர், ஒரு கோ-பைலட் இருப்பார்கள். கமாண்டர் கொடுக்கும் கட்டளைக்கு கீழ் படிந்து தான் கோ-பைலட் செயல்படுவார். தன்னிச்சையாக அவரால் செயல்பட முடியாது.
ஒரு விமானம் மேலே எழுந்து போவதை 'டேக் ஆப் ' என்கிறார்கள். விமானம் தரையிறங்குவதை 'லேன்டிங்' என்கிறார்கள். ஒரு விமானம் டேக் -ஆப் ஆவதற்கும் 'லேன்டிங்' ஆவதற்கும்
காற்றின் திசை மிக முக்கியம். காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ அதற்கு எதிர் திசையில் தான் விமானத்தை இறங்குவார்கள். காற்றடிக்கும் திசையில் விமானத்தை இயக்குவது விபத்திற்கு வழி வகுக்கும். அதனாலே ஏறும் விமானத்திற்கும் , இறங்கும் விமானத்திற்கும் காற்றின் திசை அறிந்து எந்த டிகிரியில் விமானத்தை இயக்க வேண்டும் என்று கட்டளையை தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையிறங்கும் "ரன் -வே" 09 டிகிரியில் ஆரம்பித்து 2.7 டிகிரியில் முடிவடையும். இது பூமியின் தீர்க்க ரேகை அட்சய ரேகையில் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும் என்பதை குறிக்கும். 'லேன்டிங்'ஆகப்போகும். ஒரு விமானத்திற்கு தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2.7டிகிரியில் இறங்குங்கள் அல்லது 09 டிகிரியில் இறங்குங்கள் என்று கட்டளை வரும். அதன்படி விமானி விமானத்தை பறக்க வைப்பார். அப்படி செய்யும் போது ரன் -வேயும் விமானமும் ஒரே நேர்கோட்டில் வர 'லேன்டிங்' செய்வது சுலபமாகும்.
விமான நிலையங்களில் 'இன்ஸ்ட்ரூமென்ட் லேன்டிங் சிஸ்டம்' எனும் கருவி இருக்கும். இது ரன் -வே ஆரம்பத்தில் அல்லது அதன் முடிவில் இருக்கும். லேசர் கதிர்களால் இயங்கும் கருவி. இந்த கருவியின் பயனாக எத்தகைய மேக மூட்டம் இருந்தாலும் சரி, அடை மழை பெய்து கொண்டு ரன் வே தெரியாமல் இருந்தாலும் சரி, விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியும்.