மொபைல்போனை கணினியுடன் இணைக்கும் தந்திரம்... அட, ரொம்ப ஈசிங்க!

How to connect a mobile phone to a computer?
How to connect a mobile phone to a computer?

இன்றைய கால தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துமே எளிதான விஷயங்களாக மாறி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு, அனைத்தையுமே நாம் வீட்டிலிருந்து செய்யும் நிலைக்கு மாறிவிட்டோம். அந்த அளவுக்கு செல்போன் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது எனலாம். இருப்பினும் எல்லா தருணங்களிலும் செல்போன் நம் கையிலே இருக்கும் என சொல்ல முடியாது. 

வேலை நேரத்தில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், அதிக கவனச்சிதறல் காரணமாக வேலையில் ஈடுபடாமல் போய்விடுவோம். இதைத் தவிர்ப்பதற்காகவே ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைக்கும் அம்சங்கள் உருவானது. இதைப் பயன்படுத்தி மொபைல் போனுக்கு வரும் மெசேஜ்கள், அழைப்புகள், நோட்டிபிகேஷன் என அனைத்தையுமே நாம் கணினியில் பார்த்துக்கொள்ள முடியும். இதற்கு ஏற்கனவே பல சாஃப்ட்வேர்கள் இருந்தாலும் விண்டோஸ் இப்போது இந்த அம்சத்தை எளிதாக்கியுள்ளது. 

இப்போது புதிதாக வரும் விண்டோஸ் அப்டேட்டுகளில் போன் லிங்க் என்ற அம்சம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விண்டோஸ் 10 மற்றும் 11 பயன்பாடுகளில் இதை நீங்கள் பெற முடியும். இதன் மூலமாக ஸ்மார்ட் போனை விண்டோஸ் கணினியில் எளிதாக மிரர் செய்ய முடியும். இப்படி செய்வது மூலமாக,

  • கணினியில் இருந்தே ஸ்மார்ட்போனுக்கு வரும் மெசேஜ்களை இயக்க முடியும்.

  • கணினி வாயிலாகவே அழைப்புகளை மேற்கொள்ளலாம். 

  • உங்களை ஸ்மார்ட்போன் மீடியாவை நிர்வகிக்க முடியும்.

  • ஸ்மார்ட் போனில் உள்ள செயலிகளை மிரர் செய்து கணினியில் பயன்படுத்தலாம்.

  • ஸ்மார்ட் போனில் உள்ள கோப்புகளை கணினிக்கும் கணினியில் உள்ள கோப்புகளை ஸ்மார்ட்போனுக்கும் எளிதாகப் பரிமாறலாம்.

  • இதன் மூலமாக வயர்லெஸ் பைல் ஷேரிங் அம்சம் எளிதாகிறது.

எப்படி இணைப்பது?

இந்த அம்சத்தைப் பயன்படுத்த முதலில் உங்களுடைய கணினி விண்டோஸ் 10 அல்லது 11 ஆகிய பதிப்பு அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் கணினி மற்றும் ஆண்ட்ராய்டு போன் இரண்டிலும் விண்டோஸ் லிங்க் செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். 

பின்னர் உங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினியில் ப்ளூடூத், wi-fi ஆகியவற்றை ஆக்டிவேட் செய்து, இரண்டும் ஒன்றாக இணைவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஒரு Lone Wolf என்பதற்கான 6 அறிகுறிகள்! 
How to connect a mobile phone to a computer?

அடுத்ததாக உங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் லிங்க் என்பதைத் திறந்து, அதில் ஆண்ட்ராய்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனுக்கான அணுகலைப் பெற Continue என்பதை கிளிக் செய்து உங்கள் கணினி மற்றும் ஸ்மார்ட்போன் இணைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள்.

அடுத்ததாக உங்கள் கணினி திரையில் காட்டப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, ஸ்மார்ட்போனில் கேட்கும் அனுமதிகளை வழங்கினால், விண்டோஸ் லிங்க் சேவை ஆக்டிவேட் ஆகிவிடும். 

இந்த முறையைப் பயன்படுத்தி உங்கள் கணினியையும் ஸ்மார்ட்போனையும் எளிதாக இணைத்து, உங்களது வேலைகளை ஈசியாக மாற்றிக்கொள்ள முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com