மடிக்கணினியில் இருக்கும் தூசியை அகற்றுவது எப்படி?

Cleaning a laptop
Cleaning a laptopImg Credit: Freepik

மடிக்கணினியை சுத்தம் செய்வது மிகப் பெரிய பொறுப்புடன் செய்ய வேண்டிய வேலைதான். ஏனெனில் மடிக்கணினியில் உள்ள டிஸ்ப்ளே, கீ ஆகியவை மிகவும் மெலிதான பொருட்கள் என்பதால் வேக வேகமாக துடைத்தால், அவ்வளவுதான்...

எப்படி மேஜை.டோர் போன்றவை சுத்தம் செய்வதற்கு தனித்தனி துணிகள், சுத்தம் செய்வதற்கான திரவம் பயன்படுத்துகிறோமோ அதேபோல் மடிக்கணினி சுத்தம் செய்யவும் தனித்தனி கிளீனிங் பொருட்களும் வழிமுறைகளும் உள்ளன.

டிஸ்ப்ளே சுத்தம் செய்வது பற்றி பார்ப்போம்: மடிக்கணினியின் டிஸ்ப்ளே சுத்தம் செய்யும் போது தான் மிக மிக கவனமாக இருத்தல் வேண்டும். மடிக்கணினியை சுத்தம் செய்வதற்காக இருக்கும் கிளீனிங் ஸ்ப்ரேவை நேரடியாக அடிக்காமல் மென்மையான துண்டிலோ அல்லது பஞ்சிலோ ஸ்ப்ரே செய்ய வேண்டும். பின் அதை வைத்து டிஸ்ப்ளேவின் நடுப்பகுதியில் இருந்து வட்ட வடிவத்தில் துடைக்க வேண்டும். தூசிகள் போகும் வரை இப்படி துடைக்க வேண்டும்.

கீபோர்ட் சுத்தம் செய்வதற்கான வழிகள்: கீபோர்ட் சுத்தம் செய்வதற்கு சற்று கூடுதல் பொறுமை வேண்டும். முதலில் கீபோர்டை சில நிமிடங்கள் குழுக்க வேண்டும். அப்படி குழுக்குவதால் உள்ளே இருக்கும் தூசிகள் வெளியே வரும். மீண்டும் தலைகீழாக திருப்பி பொறுமையாக குழுக்க வேண்டும். உங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது என்பதை இதில் காட்டாமல் குலுக்குவது நல்லது. ஏதாவது காட்டன் துணி அல்லது நீங்கள் பயன்படுத்தும் துண்டை வைத்து மென்மையாக துடைக்க வேண்டும். முதலில் கீயின் மேலாக துடைக்க வேண்டும்.பின்னர் துணியின் நுனிப்பகுதியை வைத்து கீயின் அந்த இடைவெளிக்குள் துடைக்க வேண்டும். பிறகு ஏதாவது மெல்லிய குச்சி போன்ற பொருளால் ஒவ்வொரு கீயின் இடைவெளியிலும் கவனமாக பொறுமையுடன் தூசிகளை அகற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! இந்த பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்!
Cleaning a laptop

இந்த இரு இடங்களையும் சுத்தம் செய்த பின்னர் மடிக்கணினி முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான டிஸ்டில் நீரை அரை ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். திரவ சோப் பயன்படுத்தி துணியை நன்றாக நனைத்து கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டு பொருட்களை வழக்கமாக சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமோனியா, ப்ளீச் போன்றவற்றை கணினி சுத்தம் செய்ய பயன்படுத்துவதற்கு தவிர்க்க வேண்டும். முழுவதுமாக ஷட் டவுன் செய்த பின்னரே சுத்தம் செய்யும் வேலையில் ஈடுப்படுவது மிக மிக முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com