எச்சரிக்கை! இந்த பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்!

Warning! Change this password immediately
Warning! Change this password immediately

பொதுவாகவே நம்முடைய சாதனத்திற்கு பாஸ்வேர்ட் செட் செய்ய வேண்டும் என்றால், அதை நாம் அனைவரும் எளிதாக ஞாபகத்தில் வைத்திருக்கும் படியான பிறந்த தேதி, ரோல் நம்பர், மனைவியின் பிறந்த தேதி, திருமண நாள் போன்றவற்றையே வைத்திருப்போம். இப்படி எளிதான பாஸ்வேர்டை நாம் செட் செய்யும்போது அது நமக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர் டெக் வல்லுனர்கள். 

இப்போது நாம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், UPI போன்ற செயல்களுக்கு பாஸ்வேர்டு முக்கியம். குறிப்பாக அவை பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய கணக்கை வேறு யாராலும் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க முடியும். அதேபோல சிலர் தங்களின் எல்லா செயலிகள், கணக்குகளுக்கும் ஒரே மாதிரியான பாஸ்வேர்டை வைத்துக் கொள்வார்கள். இதிலும் பல ஆபத்துக்கள் உள்ளது.

2023ல் எடுத்த கணக்கெடுப்புகளின் படி, இந்தியா உட்பட உலக நாடுகளில் '123456' என்கிற பொதுவான பாஸ்வேர்டை பெரும்பாலானவர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய Nordpass நிறுவனத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் பெரும்பாலான ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு பலவீனமான கடவுச்சொல்லையே மக்கள் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. 

அதேபோல தங்களின் நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு 'India@123' என வைக்கும் பாஸ்வோர்டுகளும் அதிகமாக உள்ளது. மேலும் 'Admin' என்ற வார்த்தையை பெரும்பாலான மக்கள் மாற்றமே செய்யாமல் கடவுச்சொல்லாக பயன்படுத்துகிறார்கள். இப்படி இணையதளத்தில் பயனர்கள் இதுபோன்ற கடவுச் சொற்களை அதிகப்படியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய 6.6 TB அளவு கொண்ட தரவு தளத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பாஸ்வேர்டைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி சம்பவங்களைத் தடுப்பதற்காகவே இது நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்களின் இணைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட்போன் திருட்டு மற்றும் மோசடியை தடுக்க கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய குறியீடுகள்!
Warning! Change this password immediately

இதன் காரணமாகவே Passkey அம்சத்தை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் கடவுச்சொல்லை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளைத் தடுக்கலாம். மேலும் பாஸ்வேர்டை விட இது பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர். எளிமையான பாஸ்வேர்டு வைத்திருந்தால் உங்களுடைய கணக்கின் உள்ளே ஹேக்கர்கள் எளிதாக புகுந்து விடுவார்கள் என்பதையு மறக்காதீர்கள். 

எனவே எதுவாக இருந்தாலும் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com