கூகுளில் உங்கள் தேவையற்ற தகவல்களை அகற்றுவது எப்படி தெரியுமா?

Google
Google
Published on

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கூகுள் தேடுபொறி கல்வி, வேலை, பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பரவலாகப் பயன்படுத்தப்படும் கூகுளில், நம்மைப் பற்றிய பல அந்தரங்கத் தகவல்கள் இணையவெளியில் பரவிக் கிடக்க வாய்ப்புள்ளது. இதனால், தேவையற்ற சிக்கல்களும், சில சமயங்களில் அடையாளத் திருட்டு போன்ற மோசடிகளும் நிகழக்கூடும். எனவே, நமது டிஜிட்டல் தடயங்களைக் கண்காணித்து, தேவையற்ற தகவல்களை அகற்றி, நமது தனியுரிமையைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

உங்கள் தகவல்களைக் கண்டறிதல்:

கூகுள் தேடலில் உங்களைப் பற்றிய என்னென்ன விவரங்கள் காணப்படுகின்றன என்பதை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும். இதற்கென கூகுள் ஒரு பிரத்யேக வசதியை ("Results About You") வழங்குகிறது. உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற சில அடிப்படை விவரங்களை அளிப்பதன் மூலம், உங்களைப் பற்றிய தேடல் முடிவுகளைக் கண்காணிக்க முடியும். 

இந்தத் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கூகுள் செயலி வழியாகவோ அறிவிக்கப்படும். இதன் மூலம், எந்தெந்த இணையதளங்களில் உங்கள் தகவல்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டு, தேவையற்றவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.

கூகுள் தேடல் முடிவுகளில் உங்கள் தனிப்பட்ட அடையாள எண்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள், உங்கள் கையொப்பப் படங்கள், சமூக வலைதள உள்நுழைவுத் தகவல்கள், மருத்துவ ஆவணங்கள் அல்லது உங்களை அவதூறு செய்யும் வகையிலான பதிவுகள், போலியான புகைப்படங்கள் போன்றவை இருந்தால், அவற்றை நீக்கக் கோரி கூகுளிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 

இந்த வசதி, கணினி மற்றும் கைபேசி ஆகிய இரண்டிலுமே விரைவில் எளிதாகக் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கோரிக்கை வைக்கும்போது, அந்தத் தகவலை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கும். உங்கள் கோரிக்கையை ஆய்வு செய்த பிறகு, கூகுள் எடுத்த நடவடிக்கை குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தும்.

ஒருவேளை உங்கள் தகவல்கள் உங்களுக்குச் சொந்தமில்லாத வேறு இணையதளங்களில் இருக்குமானால், முதலில் அந்த இணையதளத்தின் நிர்வாகியைத் தொடர்புகொண்டு தகவலை அகற்றும்படி கோருவதே சிறந்த வழி. இது பலனளிக்காத பட்சத்தில், அல்லது நீங்கள் நேரடியாக அவர்களைத் தொடர்புகொள்ள விரும்பவில்லை என்றால், கூகுளின் உதவியை நாடலாம். 

இதையும் படியுங்கள்:
உலகிற்கு முன்னோடியாக 10G இணைய வேகத்தை அறிமுகப்படுத்திய சீனா!
Google

அந்தத் தகவல் உங்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது அல்லது உங்களைத் துன்புறுத்தும் நோக்கில் பகிரப்பட்டுள்ளதா என்பதை விளக்கினால், கூகுள் சம்பந்தப்பட்ட இணையதளத்தைத் தொடர்புகொண்டு தகவலை நீக்க அறிவுறுத்தும்.

கூகுள் தானாக முன்வந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தேடலிலிருந்து மறைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம்தான் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தேவையற்ற தகவல்களை அகற்றக் கோரிக்கை வைக்க வேண்டும். கூகுள் வழங்கும் கருவிகளையும் வழிமுறைகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், நமது டிஜிட்டல் தடயத்தைக் கட்டுக்குள் வைத்து, இணையத்தில் நமது தனியுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
சாம்சங்குடன் கூகுளின் AI ஒப்பந்தம்: சட்டப் பிரச்னையில் கூகுள்! அடுத்து என்ன?
Google

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com