நீங்கள் அதிகமாக டிராவல் செய்யும் நபரா? அல்லது சுங்கச்சாவடிகள் அதிகம் நிறைந்த வழியில் தினசரி பயணிப்பவரா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
காரை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என ஆசைப்படுபவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது சுங்கக் கட்டணம். அதிலும் இப்போதெல்லாம் மிகக் குறுகிய இடைவெளியில் நிறைய சுங்கச்சாவடிகள் அமைத்து வசூலிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுபட்டு பணத்தை சேமிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.
நீங்கள் சாலையில் பயணிக்கும்போது சுங்கக் கட்டணங்களில் இருந்து தப்பித்து நெரிசல்களிலின்றி எளிதான வழியில் செல்ல விரும்புபவராக இருந்தால், உங்களிடம் கூகுள் மேப் இருந்தால் போதும். அதில் கொடுக்கும் சில டிப்ஸ்களைப் பயன்படுத்தி பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
முதலில் உங்கள் சாதனத்தில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் எங்கிருந்து எங்கே செல்லப் போகிறீர்கள் என்பதை என்ட்ரி செய்யவும்.
பின்னர் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்தால், Avoid tolls or avoid motorways என்ற ஆப்ஷன் வரும். அதை நீங்கள் செலக்ட் செய்து உங்கள் சாதனத்தில் சேவ் செய்துவிட்டால் போதும், இனி நீங்கள் எங்கு பயணம் மேற்கொண்டாலும் கூகுள் மேப்ஸ் உள்ளே சென்று வழியை தேடினால், சுங்கக்கட்டணம் இல்லாத விரைவாக செல்லக்கூடிய சாலையை உங்களுக்கு காண்பிக்கும்.
இப்படி சுங்கச்சாவடிகளை நீங்கள் தவிர்ப்பது மூலமாக அதிக பணத்தை சேமிக்கலாம். குறிப்பாக சுங்கச்சாவடி வழியாக தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த கூகுள் மேப்ஸ் அம்சம் உதவியாக இருக்கும். இதே போல அதிக நெரிசல் நிறைந்த சாலையை தவிர்த்து மாற்றுப் பாதையில் விரைவாக செல்லலாம்.
இருப்பினும் சில நேரங்களில் சுங்கச்சாவடியை தவிர்த்து வேறு வழியில் செல்வது உங்களுடைய பயண தூரத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால் எந்த தொந்தரவும் இல்லாமல் பயணிக்க சிறிது நேரம் ஆனாலும் பரவாயில்லை என்பவருக்கு சிறந்த அம்சமாக இது இருக்கும். உடனடியாக உங்கள் சாதனத்தை எடுத்து கூகுள் மேப்ஸில் இந்த அம்சத்தை Enable செய்து கொள்ளுங்கள்.