ஆதார் கார்டை இலவசமாக, எளிதாக அப்டேட் செய்வது எப்படி?

Aadhaar Update
Aadhaar Update
Published on

ஆதார் கார்டை இலவசமாக எளிதாக இணைய வழியாக அப்டேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களில் பிரதானமான ஆவணங்களின் பட்டியலில் ஆதார் கார்டு முன்னிலை வகிக்கிறது. மேலும் ஆதார் எண்கள் பல்வேறு வகையான அரசின் திட்டங்களுக்கு தகுதியான ஆவணமாகவும் மற்றும் பிற ஆவணங்களுக்கும் ஆதார் எண் பிரதான தேவையாகவும் இருப்பதால் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதே சமயம் புதுப்பித்தல் நடவடிக்கை, திருத்த நடவடிக்கைக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலும் இதை எளிதாக்கும் விதமாக இணையதள நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது ஒன்றிய அரசு. மேலும் இந்த நடவடிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Gork AI: எலான் மஸ்கின் அடுத்த சம்பவம்! 
Aadhaar Update

ஆதார் கார்டை எளிய முறையில் இணைய வழியாக புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு என்று பார்ப்போம். இதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பிறகு My Aadhaar என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து update your aadhaar என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து விவரங்களை பதிவு செய்து, proceed to update என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆதார் எண்ணை குறிப்பிட்டு, கேப்ட்சின்களை பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ள எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை பதிவு செய்து. அடுத்த பக்கத்தில் உள்ள Demographic தரவுகளை அப்டேட் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து அப்டேட் செய்ய வேண்டும். இறுதியாக service regust number அனுப்பப்படும். இதை ஸ்டேட்டஸ் டிராக் செய்துக் கொள்ளவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com