இன்னும் 50 ஆண்டுகள் தான்: செம ஸ்மார்ட்டாக மாறப் போகுது துபாய்!

Dubai
Dubai
Published on

தொழில்நுட்பம் உலகை ஆட்சி செய்யும் நிலையில், பல முக்கிய நகரங்கள் அதீத வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கி ன்றன. இதில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் துபாய் நகரம், அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைபடத்தை வெளியிட்டு பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

உலகிலேயே வெகு விரைவாக வளர்ந்து வரும் நகரம் என்றால் துபாய் தான். ஏனெனில் இங்குள்ள நவீன தொழில்நுட்பங்களும், கட்டமைப்பு வசதிகளும் பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளன. இங்குள்ள தலைவர்களின் சிந்தனை தொலைநோக்குப் பார்வையுடன் இருப்பதால், துபாய் நகரம் அசுர வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது.

Dubai_AI
Dubai_AI

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஏழு அமீரகங்களில் அபுதாபிக்கு அடுத்து பெரிய நகரம் துபாய். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், உடனுக்குடன் துபாய் நகரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இனி வரும் ஆண்டுகளில் பறக்கும் டாக்சி மற்றும் ஹைப்பர் லூப் போன்ற போக்குவரத்து சாதனங்கள் துபாயில் வெளிவர இருக்கின்றன. இவை அறிமுகமான பின், உலக நாடுகள் நிச்சயமாக துபாயின் மீது பொறாமை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

துபாயின் வளர்ச்சி இப்போதே ராக்கெட் வேகத்தில் இருக்கிறது என்றால், அடுத்த 50 ஆண்டுகளில் துபாய் நகரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். நாம் கற்பனை செய்து பார்க்கும் நேரத்தில் தான் புதிதாய் அறிமுகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அடுத்த 50 ஆண்டுகளில் துபாய் நகரத்தின் வளர்ச்சியை வரைபடமாய் நம் கண்முன் நிறுத்தியுள்ளது. உங்கள் கற்பனைக்கும், செயற்கை நுண்ணறிவு வரைபடத்தில் உள்ள துபாய் நகரத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், துபாய் நகரத்தின் வளர்ச்சி மட்டும் உறுதியானது.

இதையும் படியுங்கள்:
புதன் கோளில் வைரமா? என்னப்பா சொல்றாங்க விஞ்ஞானிகள்!
Dubai
Dubai
Dubai

கட்டடங்களில் வளர்ந்திருக்கும் காடுகள், பறந்து கொண்டிருக்கும் வாகனங்கள், இயற்கை அருவிகள் இருப்பது போன்ற அமைப்பு, நகரையே சுற்றி வலம் வரும் பறக்கும் சுற்றுலா ஊர்திகள் மற்றும் இதுவரையில் மனிதர்கள் கற்பனை கூட செய்திடாத கட்டுமான அமைப்புகள் என இந்த புகைப்படம் நமது பிரம்மிம்பை மேலும் அதிகப்படுத்துகிறது.

மனிதனின் கற்பனையோடு போட்டி போடும் வகையில் இருக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கற்பனை. அடுத்த தலைமுறையின் வளர்ச்சி இதுவாக இருக்கலாம்.

வளர்ச்சி அவசியம் தான், அதைவிட அவசியம் இயற்கையின் அம்சத்தை சேதப்படுத்தாமல் இருப்பது. இயற்கையை தொந்தரவு செய்யாத வளர்ச்சியை நாம் நிச்சயமாக வரவேற்கலாம். இது வெறும் புகைப்படம் தான்; இவை நம்மை பரவசமூட்டுகின்றன; இருப்பினும் இயற்கையை நாம் மதிக்க வேண்டும். அவ்வகையில், துபாயின் வளர்ச்சியில் இயற்கைக்கும் தனிகவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.

துபாய் நகரின் வளர்ச்சியைப் போல நீங்கள் வசிக்கும் நகரத்தின் வளர்ச்சியும் அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com