உடலுக்குள் உருவாகும் மின்சாரம்: உங்களுக்குத் தெரியாத பயோ-எலக்ட்ரிக் ரகசியம்!

Body Creates Electricity
Body Creates Electricity
Published on

நமது நவீன உலகம் மின்சாரத்தால் இயங்குகிறது. மின்சாரம் இல்லாமல், நாம் ஒரு நாள் கூட வாழ முடியாது என்பதுதான் இன்றைய நிஜம். மின்சாரம் என்பது சுவிட்ச் போட்டவுடன் ஒளிரும் விளக்காகவோ, நமது தொலைபேசியை சார்ஜ் செய்யும் கருவியாகவோ மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடலும் ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையம்தான். 

நாம் அறியாமலேயே, நமது அசைவுகள், சிந்தனைகள், ஏன் நமது இதயம் துடிப்பதற்குக்கூட இந்த உள்-மின்சக்திதான் காரணமாக இருக்கிறது. இந்த வினோதமான உண்மை பலருக்குத் தெரிவதில்லை. இந்த மின்சாரம் எப்படி உருவாகிறது, அது நம் உடலில் என்னென்ன அதிசயங்களைச் செய்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நம் உடலின் மின்சக்தி, ஒரு பவர் பிளாண்ட் போல மின்சாரம் உற்பத்தி செய்வதல்ல. மாறாக, அது அயனிகள் (Ions) எனப்படும் மின்சக்தி கொண்ட துகள்களின் இயக்கத்தைச் சார்ந்துள்ளது. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற அயனிகள் நேர்மறை அல்லது எதிர்மறை மின்னூட்டங்களைக் கொண்டுள்ளன. நமது செல்களின் சுவர்கள் ஒரு தடுப்புச்சுவர் போலச் செயல்பட்டு, இந்த அயனிகள் வெளியேறுவதையும், உள்ளே வருவதையும் கட்டுப்படுத்துகின்றன. இந்த அயனிகளின் செறிவு செல்லுக்கு உள்ளேயும் வெளியேயும் மாறுபடும்போது, ஒரு மின் அழுத்த வேறுபாடு (Electrical Potential Difference) உருவாகிறது. இதுவே நமது உடலின் அடிப்படையான மின் ஆற்றலாகும்.

இந்த மின் ஆற்றல்தான் நம் நரம்பு மண்டலத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது. நரம்பு செல்கள் இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தகவல்களை மூளைக்கும், மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் நொடிகளில் அனுப்பும். ஒரு பொருளை நாம் தொடும்போது, அந்தத் தகவல் நம் மூளைக்கு மின்சக்தி தூண்டல்களாகவே செல்கிறது. . அதேபோல், நாம் ஒரு பொருளை எடுக்கும்போது, மூளை அனுப்பும் கட்டளைகளும் மின்சாரச் சிக்னல்களாகவே தசைகளைச் சென்றடைந்து, அதைச் செயல்படுத்த வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
லப் டப்... லப் டப்... உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கணுமா?
Body Creates Electricity

இதற்கு நமது இதயம் ஒரு சிறந்த உதாரணம். நமது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ஒரு துல்லியமான மின்சாரத் தூண்டலால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் இதயத்தின் செயல்பாட்டை அளவிட ECG போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதயத் துடிப்பின் ஒழுங்கற்ற தன்மையை இந்த மின்சார சிக்னல்களைக் கொண்டே கண்டறிகிறார்கள்.

உடலுக்குள் நிகழும் இந்த மின்சாரத்தின் ரகசியம், நம் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு அடித்தளமாக அமைகிறது. அது நமது எண்ணங்கள், அசைவுகள், உணர்வுகள் மற்றும் இதயம் துடிப்பது என அனைத்தையும் தீர்மானிக்கிறது. இந்த மின்சக்திதான் நாம் உயிர் வாழ்வதற்கான மிக முக்கியமான சக்திகளில் ஒன்றாகும். இந்த அற்புத ஆற்றலை உணர்ந்து, நம் உடலைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமாகப் பராமரிப்பதும் நமது கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com