வருங்காலத்தை ஆக்கிரமிக்க உள்ள ஹைட்ரஜன் வாகனங்கள்!

Hydrogen vehicles.
Hydrogen vehicles.
Published on

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று போக்குவரத்து பயன்பாடு. உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சாதனங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களினுடைய எண்ணிக்கை பெருகி இயற்கை அதிக அளவில் மாசு அடைந்து வருகிறது.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து தேவைக்கு இடையூறு இல்லாமல் மக்கள் பயனடைவதை உறுதி செய்யவும் ஹைட்ரஜன் இன்ஜின்கள் உதவும் என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதர எரிபொருள் வாகனங்களால் கார்பன்-டை-ஆக்சைடு அதிகம் வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆனால் ஹைட்ரஜன் இன்ஜின்களின் பத்த வைப்பு வெப்பநிலை மிக குறைவானது. இதனால் மாசுபாடு குறையும். ஹைட்ரஜன் இன்ஜின்களை உருவாக்குவது மிக எளிமையானது. செலவும் குறைவு. டீசல் இன்ஜின்களை உள்ள சில பாகங்களை மட்டும் மாற்றினால் போதும் ஹைட்ரஜன் தயாராகிவிடும். இதனால் பழைய இஞ்சின்கள் குப்பைக்கு செல்வதும் குறையும். இது பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டு 8% அளவிற்கு பல்வேறு வகையான வாகனங்களுக்கு மற்றும் பல்வேறு இன்ஜின்கள் ஹைட்ரஜன் இன்ஜின்களாக மாற்றப்பட்டுள்ளது. இது 2050 ஆம் ஆண்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும். அதே சமயம் தற்போது ஹைட்ரஜன் எரிபொருளுடைய விலை 1200 ரூபாய் என்று உள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் 500 ரூபாய் வரை விலையை குறைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
நாட்டில் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் துவங்கும்: மத்திய அமைச்சர்!
Hydrogen vehicles.

மேலும் ஹைட்ரஜன் எரிபொருள்களை வாகனங்களுக்கு அளிப்பதற்கு பல்வேறு பங்குகளில் ஹைட்ரஜன் எரிபொருளை சேமிக்கும் நிலையங்களை அமைக்க வேண்டும். இது அதிகரிக்கப்படும் பட்சத்தில் விலை மேலும் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com