என்னது! இந்த கார் 360 டிகிரி கோணத்தில் சுழலுமா?

Hyundai Ioniq 5.
Hyundai Ioniq 5.

ஹூண்டாய் நிறுவனம் 360 டிகிரி கோணத்தில் சுழலும் Hyundai Ioniq 5 என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

கார்கள் வாங்க விரும்பும் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை கார்களை பாதுகாப்பாக எங்கு நிப்பாட்டுவது, எங்கு பார்க்கிங் செய்வது என்று தெரியாமல் பலரும் கார்களை வாங்க வாங்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனம் காரிகள் வாங்குபவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையான பார்க்கிங் பிரச்சனையை எளிதாக்கும் வகையில் 360 டிகிரி சுற்றளவில் சுழலும் வகையில் நவீன ரக காரை உருவாக்கி இருக்கின்றது.

நண்டு நகர்வதை மூலக்கருவாக வைத்து ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய வகை காரை உருவாக்கி இருக்கிறது. இதன் நான்கு வீலும் 90 டிகிரி சுற்றளவில் சுழலும் தன்மை கொண்டது. மேலும் இவற்றில் பொருத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் எந்த நிலையில் வீல்கள் திரும்பினாலும் அவற்றை சரியாக கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நான்கு புறமும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ஓட்டுநர் எளிதில் எந்த திசையை வேண்டுமானாலும் கண்காணித்து வாகனத்தை நகர்த்திக் கொள்ள முடியும். சக்கரம் எந்த பக்கம் சுழன்றாலும் வாகனத்தின் உள் உக்காந்திருப்பவருக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாப்பாக நகரும்.

இதையும் படியுங்கள்:
கார் ஏசி-யில் இத்தனை விஷயங்கள் இருக்கா?
Hyundai Ioniq 5.

மேலும் இந்த காருக்கு Hyundai Ioniq 5 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. தற்போது இந்த கார் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com