

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த சாகசங்களை (Aerobatics) நிகழ்த்தும் ஒரே வான்படை குழு இதுவாகும். இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான HAL துருவ் (Advanced Light Helicopter - ALH Dhruv) ஹெலிகாப்டர்களைக் கொண்டு இவர்கள் சாகசங்கள் செய்கிறார்கள்.
இக்குழுவானது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகிலுள்ள சூலூர் விமானப்படை நிலையத்தில் (Sulur Air Force Station) தளமாகக் கொண்டு இயங்குகிறது. சிங்கப்பூர், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளின் சர்வதேச வான்சாகசக் காட்சிகளில் இந்தியாவுக்காகப் பெருமை சேர்த்துள்ளது இந்த சாகசக் குழு..
அமெரிக்காவின் பிரெய்ட்லிங் விங்வாக்கர்ஸ், ஸ்கேன்டினேவியன் குழு, செக் நாட்டின் பிளையிங் புல்ஸ், இங்கிலாந்தின் யாக்வ்லவஸ் பார்மேஷன் ஆகியவை வான் வழியாக சாகசம் செய்து வரும் .உலகப் புகழ் பெற்ற ஏரோபேட்டிக்ஸ் அணிகள் இந்த வரிசையில் இந்தியாவின் சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவும் இடம் பெறுகிறது.
இந்திய விமானப்படையின் இளம் ஹெலிகாப்டர் பைலட்டுகள் அடங்கிய சாகசக் குழுதான் சாரங். இவர்கள் சாகசம் செய்ய வானில் புகுந்துவிட்டாலே வானமே அதிரும். வண்ணமயமாக ஜொலிக்கும்.
உலக அளவில் ஹெலிகாப்டர் சாசகக் குழுக்கள் இரண்டுதான் உள்ளன. ஒன்று நமது சாரங், இன்னொன்று இங்கிலாந்து ராணுவத்தின் ப்ளூ ஈகிள்ஸ்.கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பெங்களூரில் உள்ள விமானம் மற்றும் சிஸ்டம்ஸ் சோதனை நிறுவனத்தில் இந்த சாரங் குழு உருவாக்கப்பட்டது. அப்போது இருந்த அட்வான்ஸ்ட் இலகுரக ஹெலிகாப்டரை வைத்து இந்த டீமை உருவாக்கினர். ஸ்குவாட்ரன் லீடர் தீபிகா மிஸ்ரா, 2015-ஆம் ஆண்டில் இதில் சேர்ந்து படைப்பிரிவின் முதல் பெண் விமானியாக சாதனை படைத்தார்.
சாரங் என்றால் சமஸ்கிருதத்தில் மயில் என்று பொருள் வரும். மயில் போல இந்த ஹெலிகாப்டர்களும் வானில் மயில்தோகை போல விரிக்கும் என்பதால் இந்த பெயர்.எங்கிருந்து பார்த்தாலும் இந்த வான மயில் வானில் செய்யும் நர்த்தனம் மனதைக் கொள்ளை கொள்ளும்.
2004 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய ஏரோஸ்பேஸ் ஏர் ஷோவில்தான் சாரங் குழு தனது முதல் நிகழ்சசியை நடத்தியது. அதன் பின்னர் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் 35 நிகழ்ச்சிகளை அது நடத்தியுள்ளது. அதில் 2005 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு தூதரகத்தில் நடந்த சாகசம்தான் உலக அளவில் அதற்குப் பெரும் பெயரை ஈட்டித் தந்தது.
பெர்லினில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஷோவின்போது, பெஸ்ட் லுக்கிங் குளோஸ் பார்மேஷன் டீம் என்ற சிறப்பு கிடைத்தது. ஐந்து ஹெலிகாப்டர்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து வரை ஆங்கிலக் கால்வாயை இந்தக் குழுவினர் ஒரு சேர கடந்து அசத்தினர்.
விமானக் கண்காட்சிகள் பொதுவாக வர்த்தகம் தொடர்பான கூட்டங்களாகவும், ராணுவத் தளவாட அணிவகுப்பாகவும் மட்டுமே இருப்பது வழக்கம்.ஆனால் ஏரோ இந்தியா ஷோவானது ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் கண்காட்சியாக மாறி வருகிறது. தரையிலும், வானிலும் நடத்தப்படும் இந்த சாகசங்கள் கண்காட்சிக்கு அழகூட்டுகின்றன.
ஆசிய வான்வெளிக் கண்காட்சியில் அனைத்துலக அளவில் அறிமுகம் கண்ட ‘சாரங்க்’ குழு உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் 1,200க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள் மட்டுமல்லாது, இடர்கள் நிகழும்போது மக்களின் துயர் களைய உயிர்காக்கும் மீட்புப் பணியிலும் ‘சாரங்க்’ விமானிகள் ஈடுபடுகின்றனர்.
அன்மையில் 2026 செப்டம்பர் 8 முதல் 10 வரை எகிப்து நாட்டில் நடைபெற்ற எல் அலமைன் சர்வதேச வான்சாகசக் காட்சியில் பங்கேற்க சாரங் குழு எகிப்து சென்றது. இக்குழுவினர் தங்களது புகழ்பெற்ற 'டால்பின் லீப்' (Dolphin Leap) மற்றும் புதிய 'ஸ்பாட் ஸ்டால் டர்ன்' (Spot Stall Turn) சாகசங்களை அங்கு நிகழ்த்தி அசத்தியது.
இந்திய விமானப் படையின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் சாகசக் குழுவான சாரங் (Sarang Helicopter Display Team) குழுவின் தற்போதைய 10-வது தலைவராக விங் கமாண்டர் அபிஜித் குமார் (Wing Commander Abhijeet Kumar) பொறுப்பு வகிக்கிறார்.
மிகவும் துல்லியமாகவும், தொழில்முறை திறன்களுடனும் வான் சாகசங்களை நிகழ்த்துவதில் உலக புகழ்பெற்ற இந்த சாரங் குழு, இந்த கண்காட்சியில் தங்களின் புகழ்பெற்ற ‘டால்பின் லீப்’ சாகசத்தை வான்வெளியில் செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அதுமட்டுமின்றி, உலகிலேயே முதன்முறையாக ‘ஸ்பாட் ஸ்டால் டர்ன்’ எனப்படும் புத்தம் புதிய வான் சாகச முறையையும் இக்கண்காட்சியில் இந்திய விமானப்படை வீரர்கள் அறிமுகம் செய்தனர். இது உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து ஆர்வலர்களுக்கு இந்திய விமானப்படையின் துணிச்சலையும், வீரத்தையும் நேரில் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.