புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கினால்... சார்ஜிங் செய்வது எப்படி? 100% சார்ஜ் அவசியமா?

Smart Phone Charging
Smart Phone Charging
Published on

புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கினால் 8 மணி நேரம் ஸ்விட்ச் ஆப் பண்ணி சார்ஜ் போட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு உபயோகித்தால் தான் பேட்டரியின் ஆயுள் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதைய செல்போனில் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டுமா என்பதைப் பற்றி இப்ப பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஸ்மார்ட் போன் பேட்டரிகள் நிக்கல் கேட்மியம் அல்லது லித்தியம் அல்லது லித்தியம் பாலிமர் ஆகிய வேதிப்பொருட்களால் உருவாக்கப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக லித்தியம் அயான் மற்றும் லித்தியம் அயான் பாலிமர் பேட்டரிகள் ஸ்மார்ட் ஃபோன்களில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

முந்தைய தலைமுறை ஃபோன்களில் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்த நிக்கல் காட்மியம் பேட்டரிகளுக்கு முதல் முறை சார்ஜ் செய்யும் போது அடையும் அதிகபட்ச சார்ஜிங் அளவை ஞாபகம் வைத்துக் கொள்ளும் இயல்பு உண்டு. அதனால் தான் ஆரம்பகாலம் முதல் புதிய செல்போன் வாங்கியதும் அதன் பேட்டரியை எட்டு மணி நேரம் சார்ஜில் போடச்சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

இப்படி சார்ஜ் செய்வதால் அந்த பேட்டரிகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைந்து விடும். எனவே பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும். அதனால் தான் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்கள் வாங்கியதும் எட்டு மணி நேரம் சார்ஜில் போடச் சொல்கிறார்கள்.

ஆனால் இப்பொழுதெல்லாம் நிக்கல் காட்மியம் பேட்டரிகளின் பயன்பாடு குறைந்து லித்தியம் அயான், லித்தியம் பாலிமர் பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கு அதிகபட்ச கொள்ளளவை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாததால் இப்பொழுது வாங்கும் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கியதும் எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டியது இல்லை. அத்துடன், ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும் பொழுதும் 100% அடைய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

ஒவ்வொரு பேட்டரிக்கும் குறிப்பிட்ட முறைதான் சார்ஜிங் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உண்டு. அந்த குறிப்பிட்ட முறை சார்ஜிங் சைக்கிள் முடிந்ததும் பேட்டரியின் வாழ்நாள் முடிந்துவிடும். எனவே போன் பேட்டரி அதிக நாட்கள் வருவதற்கு சார்ஜ் 20% க்கு கீழே செல்லாமலும் 95% க்கு மேல் சார்ஜ் ஆகாமலும் பார்த்துக் கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் உண்டாகும் கண் பாதிப்புகளைத் தடுக்க 6 டிப்ஸ்!
Smart Phone Charging

பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க என்ன செய்யலாம்?

  • போன் சார்ஜிங்கில் இருக்கும்போது கேம் விளையாடுவதை தவிர்க்கலாம்.

  • இரவு முழுவதும் சார்ஜ் செய்வதையும் தவிர்க்கலாம்.

  • போன் சூடாக இருக்கும்போது அதை ON ல் வைத்தவாரே சார்ஜ் செய்யாமல் இருப்பது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.

  • ஸ்மார்ட்போன்கள் சார்ஜில் இருக்கும்பொழுது வீடியோக்கள் பார்ப்பதை தவிர்ப்பது பேட்டரியின் வாழ்நாளை கூட்டும்.

  • ஸ்மார்ட் ஃபோன்களை சார்ஜ் செய்யும்போது போனை ஆஃப் செய்து விட்டு சார்ஜில் போட பேட்டரியின் வாழ்நாள் அதிகரிக்கும்.

  • போனின் பேட்டரி அடிக்கடி சூடானால் அதன் வாழ்நாள் குறையும் என்பதால் தொடர்ந்து அதிக நேரம் உபயோகிப்பதையும், ரொம்ப நேரம் சார்ஜ் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்க போன் 'ஓவர் ஹீட்' ஆகுதா? அப்போ இந்த 10 டிப்ஸ் உங்களுக்கு தான்!
Smart Phone Charging
  • ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வரும்போதே 60% சார்ஜ் செய்தபடி தான் வருகின்றன. எனவே வாங்கியவுடன் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதற்காக எட்டு மணி நேரம் சார்ஜ் செய்து காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்கு முன் ஒரு முறை உங்கள் ஃபோனின் பேட்டரி என்ன டைப் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com