ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் உண்டாகும் கண் பாதிப்புகளைத் தடுக்க 6 டிப்ஸ்!

smartphone affects the eyes
கண்களை பாதிக்கும் ஸ்மார்ட்போன்

ற்போதைய நவீன யுகத்தில் உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறார் முதன் சீனியர் சிட்டிசன் வரை அனைவர் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்! இதை உபயோகிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை எவரும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நமது கண்களின் பளு அதிகரித்து, அதனால் சில பாதிப்புகள் உண்டாகும் அபாயமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய 6 டிப்ஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.

* ஸ்மார்ட் போனின் திரை (screen)யுடன் உண்டாகும் பிணைப்பு நம் கண்களின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும். 20-20-20 என்ற விதியைப் பின்பற்றி, போனைப் பயன்படுத்தும் ஒவ்வொரு 20  நிமிடங்களுக்குப் பின்னும் 20 மணித் துளிகள் இடைவெளி எடுத்து, இருபதடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துவது கண்களுக்கு ஓய்வு தரும்.

* உங்கள் டிவைசில் ப்ளூ லைட் ஃபில்ட்டர் உபயோகிப்பது அல்லது ப்ளூ லைட் ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் உபகரணங்களை திரையில் பொருத்துவது நன்மை தரும்.

* கண்களின் சௌகரியத்திற்கு தகுந்த அளவில்  திரையில் வெளிச்சம் பெறக்கூடிய விருப்பத் தேர்வை (Option) தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். மிக அதிக வெளிச்சம் அல்லது முழுமையாக இருண்ட சூழ்நிலையில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 
smartphone affects the eyes

* சௌகரியமான தொலைவில், அதாவது கண்களிலிருந்து  பதினாறு முதல் பதினெட்டு அங்குல தொலைவில் போனைப் பிடித்துக்கொண்டு உபயோகிக்கவும்.

* கண்களை அடிக்கடி சிமிட்டி (Blink), கண்ணுக்குள்  ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

* குறிப்பிட்ட இடைவெளிகளில், கண் டாக்டரிடம் சென்று கண்களைப் பரிசோதித்து, குறை இருப்பின் நிவர்த்தி செய்துகொள்வது நலம்.

மேற்கண்ட டிப்ஸ்களை தவறாமல் பின்பற்றி ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் வரும் பாதிப்புகளை ஸ்மார்ட்டான முறையில் தவிர்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com