டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக பயணிக்க... Cyber ​​Security Tips!

Cyber ​​Security
Cyber ​​Security
Published on

சைபர் செக்யூரிட்டி(Cyber ​​Security) என்பது கணினிகள், நெட்வொர்க்குகள், சாதனங்கள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் தாக்குதல்கள், திருட்டு மற்றும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் நடைமுறையாகும். இது அங்கீகரிக்கப்படாத அணுகல், திருட்டு, தரவு சேதம் அல்லது சேவைகளின் சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது மால்வேர், ஃபிஷிங், ரான்சம்வேர் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை பாதுகாக்க தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியது. இது கணினி பாதுகாப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு அல்லது தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

1. பொதுவாக எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்:

சைபர் செக்யூரிட்டி எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்கள், நவீன தொழில்நுட்பங்களான AI, ML மற்றும் காண்டம் கம்ப்யூட்டிங் போன்றவை குற்றவாளிகளை மிகவும் நுட்பமான தாக்குதல்களை நடத்த உதவுகின்றன.

மால்வேர்(Malware): தீம்பொருள், வைரஸ், ட்ரொஜன் போன்றவை.

ஃபிஷிங்(Phishing): மோசடியான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகள் மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது.

ரான்சம்வேர்(ransomware): தரவுகளைப் பூட்டி, பணம் பறிக்கும் தாக்குதல்கள்.

சேவை மறுப்பு தாக்குதல்கள்(DDoS): ஒரு அமைப்பை அல்லது நெட்வொர்க்கை அதிகப்படியான போக்குவரத்தால் செயலிழக்கச் செய்தல்.

Man-in-the-Middle (MITM) தாக்குதல்கள்:

இரண்டு தரப்பினருக்கு இடையே பரிமாறப்படும் தகவலின் இடையே ஊடுருவி, தகவல்களை இடைமறித்தல் அல்லது மாற்றுதல்.

Advanced Persistent Threats(APTs):

ஒரு குறிப்பிட்ட இலக்கைக் குறிவைத்து, நீண்ட காலத்திற்குள் நுட்பமான தாக்குதல்களை நடத்துவது.

SQL Injection மற்றும் XSS(Cross-Site Scripting):

வலைத்தளங்களின் பாதுகாப்பில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி, தரவுத்தளங்களை அணுகுவது அல்லது தீங்கு விளைவிப்பது.

2. சைபர் செக்யூரிட்டி - இதன் முக்கிய நோக்கங்கள்:

தீங்கிழைக்கும் தாக்குதல்கள், அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் அமைப்புகளின் இடையூறுகளில் இருந்து பாதுகாக்கிறது. தரவின் ரகசியம், ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கும் தன்மையை பாதுகாக்கும் சிறந்த தகவல் பாதுகாப்பாக அமைகிறது. சைபர் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மறைந்திருக்கும் மற்றும் சேதமடையும் தரவுகளை பாதுகாத்தல். தனிப்பட்ட நிதி மற்றும் நிறுவனத் தரவுகளைப் பாதுகாக்கிறது.

3. அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முறைகள்:

தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சி: ஊழியர்களுக்கு சைபர் தாக்குதல்கள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளிப்பது அவசியம்.

பாதுகாப்பு புதுப்பிப்புகள்: மென்பொருள்கள் மற்றும் இயக்க முறைமைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது.

வலுவான கடவுச்சொற்கள்: சிக்கலான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களை பயன்படுத்துதல்.

இதையும் படியுங்கள்:
ரோபோக்கள் நம் வேலைகளை அபகரிக்குமா? செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம்!
Cyber ​​Security

பல அடுக்கு அங்கீகாரம் (Multi-Factor Authentication): கூடுதல் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குதல்.

பாதுகாப்பு மென்பொருட்கள்: ஆன்டி வைரஸ், ஃபயர்வால்கள் போன்ற பாதுகாப்பு மென்பொருட்களை பயன்படுத்துதல்.

தரவு காப்புப்பிரதிகள்: முக்கியமான தரவுகளைத் தொடர்ந்து காப்புப்பிரதி எடுத்து, வேறு இடத்தில் சேமித்து வைத்தல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com