இந்தியாவும், சீன மோசடி கும்பலும்!

Chinese fraud gang
Chinese fraud gang
Published on

முறையற்ற மற்றும் போலியான கடன் செயலிகள் வாயிலாக கடன் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான இந்தியர்களை சீன மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது. இந்த கும்பல் போலி செயலிகள் மூலமாக ஒருவரின் எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டு, அவர்களின் கடனுக்கான ப்ராசஸ் கட்டணமாக பணத்தையும் வசூலித்து, கடனையும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பணம் பெறுவதற்காக சீனாவின் பேமென்ட் வசதியையும், இந்தியாவில் போலி செயலியையும் பயன்படுத்தி யாரிடமும் மாட்டாமல் தப்பித்து விடுகிறார்கள். எனவே இவர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என சைபர் கிரைம் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK தெரிவித்துள்ளது. இந்தியாவில் செயலிகளை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் ஆனால் அதை கண்காணிக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கை குறைவாகவும் இருப்பதால், சீன பேமெண்ட் வழியைப் பயன்படுத்தி இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக பணத்தைக் கொண்டு வரவும் இதையே அவர்கள் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முறையில் செல்லும் பணத்தை யாராலும் கண்காணிக்க முடியாது. யாருக்கு அனுப்பப்படுகிறது யாருக்கு வருகிறது என்பதை யாரும் பின்தொடர முடியாது என சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தலையணை அருகே ஸ்மார்ட்போன் வைத்துத் தூங்கும் நபர்கள் ஜாக்கிரதை!
Chinese fraud gang

தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல வங்கியின் போலி செயலியை உருவாக்கி, அதை விளம்பரப்படுத்தி ஏமாற்றியுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த குறிப்பிட்ட வங்கியின் ஆண்டு வருமானம் 23 மில்லியன் அமெரிக்க டாலராகும். ஆனால் இந்த வங்கியின் போலி செயலியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை ரூ.37 லட்சத்தை மோசடி கும்பல் சேகரித்துள்ளது என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அந்த சீன மோசடி கும்பல் 55 போலி செயலிகளை உருவாக்கி ஆண்ட்ராய்டு தளங்களில் பரவ விட்டுள்ளது. 

எனவே மக்கள் இணையத்தில் கடன் கொடுக்கும் தளங்களை முழுமையாக நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது போன்ற போலி செயலைகளைத் தடுக்கும் நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தாலும், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com