சிங்கிள் பெட் ரூம் ரூ.750, டபுள் பெட் ரூம் ரூ.1,100 செலவில் வீடுகள்! எங்கே? எப்படி? எப்போது?

இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றழைக்கப்படும் இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
G.D.Naidu
G.D.Naidu
Published on

உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இந்திய விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில், கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவின் பங்கு அதிகம். அவர் பல துறைகளில் நிபுணராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பிளேடுகளுக்கு பற்றாக்குறை நிலவியது. ஷேவிங்குக்கு ஒரே பிளேடைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில் மக்கள் ரொட்டித்துண்டுகளை வித்தியாசமாக வெட்டுவதை பார்க்க நேர்ந்த ஜி.டி.நாயுடு, உடனடியாக ஒரு பொம்மை காரை வாங்கினார். அதன் மோட்டாரை மட்டும் கழட்டி, பிளேடில் பயன்படுத்திப் பார்த்தார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றது. நண்பர்கள் மத்தியிலும் அது நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஐரோப்பாவில் அதற்கு காப்புரிமையும் கிடைத்தது. லண்டனில் கடைகளில் விற்பனைக்கும் வந்தது. முதல் மாதத்திலேயே அவரின் 7,500 ரேசர்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஜி.டி.நாயுடு ஒரு முறை சிக்காக்கோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அப்போது, அங்கு, ஆரஞ்ச் ஜூஸில் இருக்கும் வைட்டமின்கள் குறித்து ஒரு பேராசிரியர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அந்தப் பேராசிரியர் ஒரு ஜூஸரும் தயாரித்திருந்தார். ஆனால், அதில் ஜூஸ் தயாரிக்கும் போது, ஆரஞ்சின் விதைகள் வீணாவதுடன், ஜூஸின் சுவையும் மாறியிருந்தது. அதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஜி.டி.நாயுடு, சிம்பிள் காய்ன் ஸ்ப்ரிங் என்ற ஐடியாவை கொடுத்தார். அந்த ஸ்ப்ரிங் பொருத்தியவுடன், பிரச்னையும் சரியாகி அந்த ஜூஸர் விற்பனைக்கு வந்து விட்டது.

இதையும் படியுங்கள்:
ஜி.டி.நாயுடு: இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன்!
G.D.Naidu

அவர் கண்டுபிடித்த உருளைக் கிழங்கு தோல் உரிக்கும் இயந்திரம் 1940களிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

1950-ம் ஆண்டில் அவர் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் கீ கொடுத்தால் இயங்கும் சுவர் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.

ஜி.டி.நாயுடு தயாரித்த ரேடியோ கிராம் 6 வால்வுகள், 4 பேண்டுகள், 4 ஸ்பீக்கர் வசதிகள் கொண்டவை. மேலும், இவற்றை 10 ரெக்காடர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி கொண்ட ரேடியோகிராமை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியது ஜி.டி.நாயுடுதான். தமிழ் டயல் வைத்த ரேடியோவை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதும் ஜி.டி.நாயுடுதான்.

கட்டடங்கள் வலுவாக இருக்க 1950-ம் ஆண்டு, அரிசி உமி மற்றும் சிமெண்ட்டை கலந்து ஒரு கலவையை அவர் உருவாக்கினார்.

1937-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்து அறிமுகப்படுத்தினார் ஜி.டி.நாயுடு. விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு இது மிகவும் உதவியாக இருந்தது.

அனைத்து மக்களுக்கும் ஓர் சொந்த வீடு என்பது ஜி.டி.நாயுடுவின் கனவுத்திட்டமாகும். இதற்காக 1950-ம் ஆண்டு இவர் உருவாக்கிய டிசைன் சிங்கிள் பெட் ரூமினை ரூ.750செலவிலும், டபுள் பெட் ரூமினை ரூ.1,100 செலவிலும் வீடுகளைக் கட்ட சாத்தியமாக்கியது. இதற்கான திட்ட வரைவுக்கு அரசின் அங்கீகாரமும் விரைவில் கிடைத்தது. இதன் மூலம் வீடுகளை ஒரே நாளில் கட்டி முடிப்பது அனைவருக்கும் சாத்தியமானது.

மேலும், கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என்று ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவரின் ஹோட்டல் பணியின் மூலம் வந்த வருமானத்தில் பணத்தைச் சேமித்து ஒரு பைக்கை வாங்கினார். அதை வாங்கியவுடன் அதை அக்கு வேறு, ஆணி வேராகப் பிரித்துப் பார்த்து ஆட்டோ மொபைல்ஸ் பற்றி அறிந்துக் கொண்டார். பின்னர், அவர் ஸ்பின்னிங் மில், போக்குவரத்து என்று பல துறைகளில் இறங்கினார்.

ஜி.டி.நாயுடு தொடங்கிய போக்குவரத்துப் பேருந்தில், முதல் நடத்துனரும், ஓட்டுநரும் அவரேதான். அதன் பிறகு அது 600 பேருந்துகளுடன், யுனைட்டட் மோட்டர் சர்வீஸாக மாறி வளர்ந்தது.

ஒரு கட்டத்தில், ஜி.டி.நாயுடுவுக்குக் கீழ் 62 நிறுவனங்கள் இயங்கின.

ஜி.டி.நாயுடு சித்த மருத்துவராகவும் இருந்தார். சித்தாவில் பல மருந்துகளை தயாரித்தது ஜி.டி.நாயுடுவின் மிக முக்கியமான பணியாகக் கருதப்படுகிறது.

இன்று கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக இருக்க ஜி.டி.நாயுடுவே காரணமாகும். இவர் 4-ம் வகுப்பு தமிழ் வழியில் படித்தவர்தான். எனினும், வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை, நமது ஊரின் சூழ்நிலைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தியது பாராட்டுக்குரியது.

இதையும் படியுங்கள்:
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!
G.D.Naidu

கோவை, அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தை தினமும் பள்ளி மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பலர் பார்த்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றழைப்பது அவரின் பெருமைக்கு நாம் அளிக்கும் மிகச்சிறந்த அங்கீகாரமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com