25 டன் எடையை சுமந்து 55,000 அடி உயரத்தில் பறக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் - உருவாக்கும் முயற்சியில் இந்தியா!

25 டன் எடையை சுமந்து 55,000 அடி உயரத்தில் பறக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் - உருவாக்கும் முயற்சியில் இந்தியா!
Published on

இந்தியா 5 ஆம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதில் முனைப்புடன் உள்ளது. தற்போது, ​​அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை மட்டும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வைத்துள்ளன. 

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், ஆபத்தான காலங்களில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், அதிநவீன போர்விமானத் தேவையின் நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் 5 ஆம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் AMCA நிறுவனம் தேஜாஸ் என்ற இலகுரக போர் விமானத்தை  வெற்றிகரமாக உருவாக்கியதை தொடர்ந்து, AMCA வின் மீது இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்தது. இந்தத் போர் விமானத் திட்டத்தின் ஆரம்ப மேம்பாட்டுச் செலவு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விமான மேம்பாட்டு நிறுவனம் (ADA) மூலோபாய தொழில்துறை கூட்டாண்மைகள் மூலம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இந்தத் திட்டத்தை டி.ஆர்.டி.ஓ வின் கீழ் செயல்படும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி வழிநடத்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் உருவாக்கப்படும். இது இந்திய விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும். இந்த விமானம் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியால் வடிவமைக்கப்பட உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் விமான உற்பத்தியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பு தன்னிறைவுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் மற்றும் உள்நாட்டு வானியல் துறையை வலுப்படுத்தும். இந்திய விமானப்படையின் போர் திறன்களை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் AMCA இன் வளர்ச்சி முக்கியமான ஒன்றாகும்.

இந்த விமானம் ஒற்றை இருக்கை மட்டும் கொண்டிருக்கும். இது  இரட்டை எஞ்சின் செயல்பாட்டின் மூலம் பறக்க வல்லது. மேலும் அனைத்து வானிலையிலும் செயல்படும் வகையில் திறனையும் கொண்டிருக்கும். இது அதிகபட்சமாக சுமார் 25 டன் எடையை சுமந்து 55,000 அடி உயரத்தில் பறக்கும். இந்த விமானம் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை இரண்டிற்கும் உபயோகப்படும் நோக்கத்தில் தயாரிக்கப்படுகிறது.

புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சில சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இந்த விமானத்தால் அதிவேகத்தில் பறக்க முடியும். மேலும் இது எதிரி விமானங்களை விரைவாக அழிக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இனி மொழி ஒரு தடையல்ல... கூகுளின் மாபெரும் அப்டேட்!
25 டன் எடையை சுமந்து 55,000 அடி உயரத்தில் பறக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் - உருவாக்கும் முயற்சியில் இந்தியா!

இதில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எதிரி ரேடார்களைத் தவிர்க்க உதவும். மேம்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டிருக்கும். இது விமானிக்கு சிறந்த கட்டுப்பாடு மற்றும் முடிவெடுப்பதில் உதவும். 5 ஆம் தலைமுறை விமானத்தை வான்வழிப் போர், தரைவழித் தாக்குதல் மற்றும் உளவுத்துறை சேகரிப்பு போன்ற பல்வேறு பணிகளில் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com